WAQF Bill: “இஸ்லாமியர்களுக்கு விஜய் உறுதுணையாக இருப்பார்'' – தவெக ஆர்ப்பாட்டத்தில் ஆனந்த்

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நேற்று தவெக தலைவர் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி, இன்று வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் பனையூர் ஜங்ஷனில் ஆர்ப்பாட்டம் … Read more

சென்னை – கோகுலம் நிதி நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை: பின்னணி என்ன?

சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கோகுலம் நிதி நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபடுள்ளனர். இந்நிறுவனம் ‘எம்புரான்’ திரைப்படத்துக்கு பைனான்ஸ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. வருமான வரிச் சோதனையைத் தொடர்ந்து.. முன்னதாக, கடந்த 2017 ஆம் ஆண்டு இதே கோகுலம் நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த நிறுவனத்தின் கேரளா, ஆந்திரா கிளைகள் என ஒரே நேரத்தில் பல்வேறு கிளைகளிலும் சோதனை நடந்தது. அதில் சுமார் ரூ.1000 கோடிக்கும் மேல் கணக்கில் வராத … Read more

ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: ஸ்ரீஹரிகோட்டாவில் மூன்றாவது ஏவுதளம் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரோவின் அடுத்த தலைமுறை ராக்கெட் உருவாக்கும் பணி தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. இது 90 மீட்டர் உயரமும், அதிகபட்சமாக 1000 டன் எடையும் கொண்டது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ஏவுதளங்கள் இந்த வகை ராக்கெட்களை விண்ணில் செலுத்த முடியாது. எனவே மூன்றாவது ஏவுதளம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ரூ.3984.86 கோடி செலவிலான இத்திட்டம் 4 ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலங்களவையில் விண்வெளித்துறை … Read more

ரோகித் சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியில் நீடிப்பாரா? முடிவு செய்யும் இன்றைய போட்டி

Rohit Sharma News Today : இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வரும் அவர் மூன்று போட்டிகளிலும் சேர்த்து 21 ரன்கள் எடுத்துள்ளார். இதனால் அவர் மீது மும்பை அணி நிர்வாகம் கடும் அதிருப்தியில் இருக்கிறது. ஓப்பனிங் இறங்கும் அவர் முதல் பேட்டிங் அல்லது சேஸிங் என எதுவாக இருந்தாலும் பொறுப்பில்லாத ஷாட்டுகளை விளையாடி அவுட்டாவதை … Read more

BSNL பெறும் ரூ.61,000 கோடி 5ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு… மிக விரைவில் 5ஜி சேவை

இந்தியாவில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு சவால் அளிக்கும் வகையில் BSNL நிறுவனம் தொடர்ந்து தனது நெட்வொர்க்கை விரிவுபடுத்தி வருகிறது. இந்நிலையில், பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ.61,000 கோடி மதிப்பிலான 5ஜி அலைக்கற்றையை இந்திய அரசு ஒதுக்கியுள்ள செய்தி, பிஎஸ்என்எல் விரைவில் 5ஜி சேவையை தொடங்கலாம் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது. பிரீமியம் ஸ்பெக்ட்ரம் பேண்டுகளுக்கான அணுகல் மத்திய அரசின் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் மூலம், BSNL நிறுவனம், 5G சேவைகளுக்கு … Read more

கொடைக்கானல் கூட்ட நெரிசலை தவிர்க்க மாற்றுப்பாதை! பேரவையில் அமைச்சர் வேலு தகவல்…

சென்னை: கொடைக்கானல் கூட்ட நெரிசலை தவிர்க்க மாற்றுப்பாதை  திட்ட அறிக்கை தயாராகி வருகிறது என  சட்டப்பேரவையில் உறுப்பினரின் கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.  ஏற்கனவே பட்ஜெட்மீதான விவாதம் முடிவடைந்த நிலையில், மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.  இன்று பேரவை நிகழ்வுகள் தொடங்கியதும், கேள்வி நேரத்தின்போது, உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் கூறினார். அப்போது,  பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி. செந்தில்குமார்  கொடைக்கானலுக்கு … Read more

கிரீஸ் நாட்டில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து: 7 பேர் பலி

ஏதென்ஸ், துருக்கியிலிருந்து கிரீஸ் நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள லெஸ்போஸ் தீவை நோக்கி ஏகன் கடல் வழியாக பயணித்த அகதிகள் படகு ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது ஏழு பேர் உயிரிழந்தனர். இதனிடையே கடலில் உயிருக்கு போராடிய 23 பேரை கிரீஸ் நாட்டின் கடலோரக் காவல் படையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் தேடுதல் நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நல்ல வானிலை இருந்தபோதிலும் நடந்த இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து … Read more

சென்டினல் தீவு: கால் வைத்த அமெரிக்கர் கைது; இந்த தீவின் ரகசியங்கள் என்ன?

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள ஒரு தடைசெய்யப்பட்ட தீவுக்குள் சென்றதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மிகைலோ விக்டோரோவிச் பாலியாகோவ் என்ற 24 வயது இளைஞர், கூர்ம தேரா கடற்கரையில் இருந்து எந்த அனுமதியும் இல்லாமல் பழங்குடி தீவான வடக்கு சென்டினல் தீவுக்கு சென்றுள்ளார். பழங்குடி மக்களுக்கு அளிப்பதற்காக தேங்காயும், கோலா பானங்களும் கொண்டு சென்றுள்ளார். சென்டினல் தீவில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக அழைந்து திரிந்துள்ளார். ஆனால் அவர் எந்த பழங்குடிகளையும் பார்க்கவில்லை. பின்னர் கொண்டுவந்த … Read more

சென்​னை, காம​ராஜர் துறை​முகங்​கள் 103 மில்​லியன் மெட்ரிக் டன் சரக்​கு​களை கையாண்டு புதிய சாதனை

சென்னை: சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம் இணைந்து, சரக்குகளை கையாள்வதில் 100 மில்லியன் மெட்ரிக் டன்களை கடந்து சாதனை படைத்துள்ளன. மொத்தம் 103.36 மில்லியன் மெட்ரிக் டன்கள் எட்டியுள்ளதாக சென்னை துறைமுக ஆணையம் மற்றும் காமராஜர் துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்தார். சென்னை துறைமுகம் ஆணையம் மற்றும் காமராஜர் துறைமுக நிறுவனத்தின் 2024-25-ம் நிதியாண்டில் செயல்பாடு மற்றும் நிதி செயல்திறன் தொடர்பாக பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், சென்னை துறைமுகம் ஆணையம் மற்றும் … Read more

வக்பு திருத்தச் சட்டம் ஏழை முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்: பிரதமர் மோடி

புதுடெல்லி: “வக்பு திருத்தச் சட்டம் ஏழை முஸ்லிம்கள், முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும். நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டவர்களுக்கும், வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும் இந்த மசோதா உதவும்.” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மக்களவையில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நள்ளிரவு வரை நீடித்த விவாதத்துக்குப் பிறகு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 128 உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 95 பேர் எதிராகவும் வாக்களித்தனர். இதனையடுத்து வக்பு சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியதாக … Read more