தனுஷ் விவகாரம் : `உங்கள் பங்கிற்கு ஒரு புதிய அரசியலை புகுத்தாதீர்கள்' – ஆர்.கே.செல்வமணி ஆவேசம்

நடிகர் தனுஷ் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்தில் அட்வான்ஸ் பெற்றுவிட்டு கால்ஷிட் கொடுக்காத விவகாரம் முன்பு சர்ச்சையாக எழுந்திருந்தது. அதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை இந்த விவகாரம் தொடர்பாக ஃபெஃப்சி தலைவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியிடம் பல கேள்விகளைக் கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் கலைச்செல்வி. ஆர்.கே. செல்வமணி இந்த அறிக்கை வெளியானதை தொடர்ந்து இயக்குநர் ஆர்.கே.செல்வமணி நிகழ்வு ஒன்றில் இது தொடர்பாக பேசியிருந்தார். தற்போது கலைச்செல்வி வெளியிட்ட அறிக்கைக்கு … Read more

மத்திய அரசை கண்டித்து தலைமைச் செயலக வளாகத்தில் திமுக எம்எல்ஏக்கள் கோஷம்

சென்னை: மத்திய அரசை கண்டித்து தலைமைச் செயலக வளாகத்தில் திமுக எம்எல்ஏக்கள் பதாகைகள் ஏந்தி கோஷமிட்டனர். வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டதை கண்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று சட்டபேரவை நிகழ்வுகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர். இந்நிலையில் திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்தில் வக்பு வாரிய சட்டத்திருத்த … Read more

“வக்பு மசோதா ஏழை முஸ்லிம்களுக்கு ஒரு பரிசை கொண்டுவரப் போகிறது” இந்திய சூஃபி அறக்கட்டளை

புதுடெல்லி: வக்பு மசோதா ஏழை முஸ்லிம்களுக்கு ஒரு பரிசை கொண்டு வரப்போகிறது என தெரிவித்துள்ள இந்திய சுஃபி அறக்கட்டளை தலைவர் காஷிஷ் வார்சி, முஸ்லிம்கள் அனைவரும் வக்பு மசோதாவை படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய சூஃபி அறக்கட்டளையின் தலைவர் காஷிஷ் வார்சி, “இந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்காக அரசுக்கு எனது வாழ்த்துகள். வக்பு மசோதாவால் முஸ்லிம்களுக்கு எந்தத் தீங்கும் இல்லை என்பதை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உரை … Read more

புதிய வரிகளை உடனடியாக நீக்க அமெரிக்காவுக்கு சீனா வலியுறுத்தல்; பதிலடி கொடுக்கவும் சபதம்!

பெய்ஜிங்: அமெரிக்கா சமீபத்தில் விதித்திருக்கும் வரிகளை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. மேலும் தனது நாட்டின் சொந்த நலன்களைப் பாதுகாக்க பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் வர்த்தக உறவில் இருக்கும் உலக நாடுகளுக்கு கூடுதல் வரியை அதிபர் ட்ரம்ப் விதித்திருக்கும் நிலையில் சீனா இவ்வாறு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீன வர்த்தகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்காவின் இந்த நடவடிக்கை பல தசாப்தங்களாக பேச்சுவார்த்தைகளின் மூலம் எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்களின் சமநிலையையும், சர்வதேச வர்த்தகத்தின் … Read more

ஷாக்கில் ஆசிரியர்கள்… 25,000 பேரின் பணி ஆணை ரத்து – உச்ச நீதிமன்றம் அதிரடி!

25 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாதவர்களுக்கான பணி ஆணையினை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது மேற்கு வங்க அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

ரிஷப் பந்துக்கு வந்த சிக்கல்… லக்னோ அணியில் மாற்றம் இருக்குமா?

Rishabh Pant Latest News : ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ரிஷப் பந்த் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருவதால் அவர் இந்த சீசன் முழுவதும் அந்த அணியின் கேப்டன் பொறுப்பில் இருப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் தோல்வியும், ஒரு போட்டியில் வெற்றியும் பெற்றிருக்கிறது. இந்த மூன்று போட்டிகளிலும் ரிஷப் பந்த் மிக மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு போட்டியில் டக் … Read more

'திரு. ஜோசப் விஜய் அவர்களே இது தவறு… நீங்கள் சினிமா வாரிசு' – விஜய்யை சாடிய போஸ் வெங்கட்

திமுக கூட்டத்தில் விஜய்யை போஸ் வெங்கட் விமர்சித்துப் பேசியிருக்கிறார். திமுக கூட்டத்தில் பேசிய போஸ் வெங்கட், ” ஸ்டாலின் கடின உழைப்பாளி. 14 வயதில் இருந்து உழைக்கிறார். கோபாலபுரத்தில் திமுக இளைஞரணி என்ற அமைப்பைத் தொடங்கினார். பெரியாருடன் இணக்கமாக இருந்தார். எம்.ஜி.ஆர் உடன் இணக்கமாக இருந்தார். அண்ணாவைத் தெரிந்து வைத்திருந்தார். 14, 16, 17 வயதில் உழைத்தவரைப் பார்த்து தற்போது நான் உனக்கு போட்டி என்கிறாரே அவர் யார்? 14 வயதில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள். … Read more

ஏசி அதிகம் பயன்படுத்துவதால்… மின் கட்டணம் ஷாக் அடிக்காமல் இருக்க… சில டிபஸ்

கோடை காலத்தில், கொளுத்தும் வெயிலில், ஏசி அதிகம் பயன்படுத்துவது சகஜம் தான். ஆனால் ஏசியை அதிகம் பயன்படுத்துவதால் வரும் மின்கட்டணத்தை நினைத்தாலும் மனதில் டென்ஷன் உண்டாவதையும் தவிர்க்க முடிவதில்லை. ஆனால் சில சிறப்பு டிப்ஸ்களை பின்பற்றினால், ஏசி அதிகம் பயன்படுத்துவதால் ஏற்படும் மின் கட்டணம் அதிகமாக ஆவதை தவிர்க்கலாம். ஏசியை அதிக நேரம் இயக்கினாலும் அதிக மின்கட்டணம் வராமல் இருக்க கவனத்தில் கொள்ள வேண்டியவை சரியான அளவில் ஏசி செட்டிங்ஸ் ஏசியின் சரியான வெப்பநிலை செட்டிங்ஸ்களைப் பயன்படுத்துவதன் … Read more

பைக் டாக்ஸி சேவைக்கு 6 வாரம் தடை! கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பெங்களூரு: கர்நாடகாவில் பைக் டாக்ஸி சேவைக்கு  6 வாரம்  உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது பைக் டாச்சி ஓட்டுநரிடையை அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக உயர்நீதிமன்றம், மாநிலத்தில் உள்ள ரேபிடோ மற்றும் பிற பைக் டாக்ஸி சேவைகளை 6 வாரங்களுக்குள் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. பைக் டாக்ஸி நடவடிக்கைகளுக்குத் தேவையான விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை வகுக்க கர்நாடக அரசுக்கு மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கி உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் கேவமாக வளர்ந்து வரும் தொழில்களில் … Read more

கர்நாடகாவில் பைக் டாக்ஸிகளுக்கு தடை விதிக்க வேண்டும் – உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

பெங்களூரு, பெங்களூருவில் ரேபிடோ உள்ளிட்ட சில நிறுவனங்கள் பைக் டாக்சி சேவையை வழங்கி வருகின்றன. இந்த பைக் டாக்சி சேவைகளால் ஆட்டோ ஓட்டுநர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இதனால் எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோ ஓட்டுநர்கள் பலரும் போராட்டம் நடத்தினர், இந்த நிலையில் ரேபிடோ உள்ளிட்ட பைக் டாக்ஸிகளுக்கு முறையான வழிகாட்டு நெறிமுறைகள் இல்லாததால் பயணிகளின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளதாக ஓலா தரப்பில் நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து ரேபிடோ உள்ளிட்ட பைக் டாக்சி சேவைகளுக்கு உடனடியாக தடை விதித்து … Read more