சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணை தாமதம் ஏன்? – உயர் நீதிமன்றத்தில் சிபிஐ விளக்கம்

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை நடந்து வரும் நீதிமன்றத்தில் நீதிபதி பணியிடம் காலியாக இருப்பதாலும், சாட்சிகளை அனைத்து தரப்பினரும் குறுக்கு விசாரணை நடத்துவதாலும் விசாரணை தாமதமாகி வருகிறது என உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ். இவர்களை கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 19-ல் கரோனா ஊரடங்கு நேரம் தாண்டி செல்போன் கடையை திறந்து வைத்திருந்ததாக கூறி போலீஸார் விசாரணைக்காக காவல் … Read more

மேற்கு வங்கத்தில் 25,000+ ஆசிரியர்கள் பணி நீக்கத்தை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கடந்த 2016-ம் ஆண்டு மேற்கு வங்க ஆசிரியர் பணி நியமனம் சட்டவிரோதமாக நடைபெற்றிருப்பதாகக் கூறி கொல்கத்தா உயர் நீதிமன்றம் 25,753 பேரின் பணி நியமனத்தை ரத்து செய்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதி பி.வி. சஞ்சய் குமார் அடங்கிய அமர்வு முறைகேடான முறையில் ஆசிரியர் நியமனங்கள் நடந்திருப்பதால் இது மோசடிக்குச் சமம் என்று தெரிவித்தது. நீதிபதிகள் … Read more

ஜோதிகாவுக்கு பதில் சந்திரமுகியாக நடிக்க இருந்தவர்! கர்ப்பமானதால் தவறிய வாய்ப்பு-யார் தெரியுமா?

First Choice To Play Ganga In Chandramukhi : 2005-ல் வெளியாகி, பெரிய அளவில் ஹிட் ஆன படம் சந்திரமுகி. இந்த படத்தில், ஜோதிகாவுக்கு பதில் நடிக்க இருந்தவர் யார் தெரியுமா?  

அமெரிக்கா விதித்துள்ள இறக்குமதி வரி இந்தியப் பொருளாதாரத்தை முற்றிலுமாக அழித்துவிடும் : ராகுல் காந்தி

அமெரிக்கா விதித்துள்ள இறக்குமதி வரி இந்தியப் பொருளாதாரத்தை முற்றிலுமாக அழித்துவிடும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுவந்த வரியை 10 முதல் 50 சதம் வரை உயர்த்தியுள்ளது டிரம்ப் நிர்வாகம். இதில், பிரிட்டனுக்கு 10 சதவீதமும், இந்தியாவுக்கு 26 சதவீதமும், சீனாவுக்கு 34 சதவீதமும் அதிகபட்சமாக கம்போடியாவுக்கு 49 சதவீதமும் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தின் போதே … Read more

பங்கு சந்தை வீழ்ச்சி; சென்செக்ஸ் குறியீடு 800 புள்ளிகள் சரிவு

மும்பை, மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 800 புள்ளிகள் சரிவடைந்து 75,811.12 புள்ளிகளாக உள்ளது. இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 182.05 புள்ளிகள் சரிவடைந்து 23,150.30 புள்ளிகளாக உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் சமீபத்திய வரிவிதிப்பு அறிவிப்பானது, உலக அளவில் எதிரொலித்து வர்த்தக சரிவு ஏற்பட்டு உள்ளது. இது இந்திய பங்கு சந்தைகளிலும் இன்று பிரதிபலித்து உள்ளது. முதலீட்டாளர்கள் எதிர்மறையாக வினையாற்றி உள்ளனர். அவர்கள் தங்கம் போன்ற … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்; குஜராத் அணிக்கு 170 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பெங்களூரு

பெங்களூரு, 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 14-வது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி மோதுகிறது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பிலிப் சால்ட் 14 ரன்களும், விராட் கோலி 7 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் … Read more

இந்திய பொருட்கள் மீது 26 சதவீதம் வரி: டொனால்டு டிரம்ப் அதிரடி அறிவிப்பு

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பிரதமர் மோடி பிப்ரவரியில் அமெரிக்கா சென்றிருந்தபோது அவர் நல்ல நண்பர் என்று பாராட்டியபோதிலும், இந்தியாவின் அதிக வரிவிதிப்பை விமர்சித்தார். இந்த மாத தொடக்கத்தில் டிரம்ப் பேசும்போது, ஏப்ரல் 2-ந் தேதி பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப பரஸ்பர வரியை மாற்றி அமைக்கப்போவதாகவும், அதுதான் அமெரிக்காவின் விடுதலை நாளாக அமையும் என்றும் கூறினார். தற்காலிகமான வரிகள், நாட்டை மாற்றி அமைக்கும் முக்கிய வரிவிதிப்புகள் அன்றைய தினம் அறிவிக்கப்படும் என்றார். அமெரிக்க பொருட்கள் … Read more

58.31 லட்சம் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்த ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா | Automobile Tamilan

ஹோண்டா மோட்டார்சைக்கிள் (HMSI) நிறுவனத்தின் ஒட்டுமொத்த 2024-2025 ஆம் நிதியாண்டில் 58.31 லட்சம் விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. முந்தைய நிதியாண்டை விட 19 % வரை கூடுதலான வளர்ச்சி அடைந்துள்ளது. மாதாந்திர மார்ச் 2025ல் இந்நிறுவனம் 4,27,448 யூனிட்களை விற்ற நிலையில் உள்நாட்டு விற்பனையில் 4,01,411 யூனிட்களும் ஏற்றுமதியில் 26,037 யூனிட்களும் உள்ளது. ஹோண்டா நிறுவனம் தனது முதல் ஆக்டிவா இ ஸ்கூட்டர் மற்றும் QC1 மாடலை விற்பனைக்கு வெளியிட்டு குறிப்பிட்ட சில நகரங்களில் டெலிவரியும் … Read more

தனுஷ் விவகாரம் : `உங்கள் பங்கிற்கு ஒரு புதிய அரசியலை புகுத்தாதீர்கள்' – ஆர்.கே.செல்வமணி ஆவேசம்

நடிகர் தனுஷ் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்தில் அட்வான்ஸ் பெற்றுவிட்டு கால்ஷிட் கொடுக்காத விவகாரம் முன்பு சர்ச்சையாக எழுந்திருந்தது. அதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை இந்த விவகாரம் தொடர்பாக ஃபெஃப்சி தலைவர் இயக்குநர் ஆர்.கே.செல்வமணியிடம் பல கேள்விகளைக் கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் கலைச்செல்வி. ஆர்.கே. செல்வமணி இந்த அறிக்கை வெளியானதை தொடர்ந்து இயக்குநர் ஆர்.கே.செல்வமணி நிகழ்வு ஒன்றில் இது தொடர்பாக பேசியிருந்தார். தற்போது கலைச்செல்வி வெளியிட்ட அறிக்கைக்கு … Read more

மத்திய அரசை கண்டித்து தலைமைச் செயலக வளாகத்தில் திமுக எம்எல்ஏக்கள் கோஷம்

சென்னை: மத்திய அரசை கண்டித்து தலைமைச் செயலக வளாகத்தில் திமுக எம்எல்ஏக்கள் பதாகைகள் ஏந்தி கோஷமிட்டனர். வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டதை கண்டித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று சட்டபேரவை நிகழ்வுகளில் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டனர். இந்நிலையில் திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை வளாகத்தில் வக்பு வாரிய சட்டத்திருத்த … Read more