உலகின் முதல் சிவாலயம்; நவகிரக பயம் நீக்கும் அபூர்வ தரிசனம் – உத்திரகோசமங்கை கும்பாபிஷேகம் ஸ்பெஷல்
பாண்டிய நாட்டின் பதினான்கு சிவத் தலங்களுக்கு முன்பாக உருவான தலம் உத்திரகோசமங்கை. இலந்தை மரத்தினடியில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளிய இந்தத் தலத்தில்தான், சிவபெருமான் அம்பிகைக்கு வேதாகம ரகசியப் பொருளை உபதேசித்து அருளினார் என்கின்ற ஞான நூல்கள். ‘உத்திரம்’ என்றால் ரகசியம்; ‘கோசம்’ என்றால் உபதேசித்தல் என்று பொருள். இந்த அற்புதத்தையொட்டியே இந்தத் தலம் ‘திருஉத்திரகோச மங்கை’ என்று அழைக்கப்படுகிறது. இதுவே உலகின் முதல் சிவாலயம் என்பார்கள் பெரியோர்கள். மூலவர் சுயம்புத் திருமேனியராக சதுர ஆவுடையாருடன் திகழ்கிறார். … Read more