சொத்து மதிப்பை அடிக்கடி உயர்த்தும் முடிவை தமிழக அரசு கைவிட ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: “தமிழக அரசு சொத்து மதிப்பை அதிகப்படுத்தாமல் பதிவு கட்டணத்தை உயர்தினால் கூட தமிழக அரசுக்கு வருமானம் வரும், மக்களும் பயனடைவார்கள். ஆனால் சொத்து மதிப்பை மீண்டும், மீண்டும் அதிகப்படுத்துவதால் பொதுமக்களுக்கு வருமான வரி சுமை கூடுகிறது, பொது மக்களுக்கு எந்தவித நன்மையும் அடைவதில்லை. ஆகவே தமிழக அரசு சொத்தின் மதிப்பை அடிக்கடி உயர்த்தும் முடிவை கைவிட்டு, மக்கள் பயனடையும் வகையில் செயல்பட வேண்டும்” என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் … Read more

கடப்பாவில் ஏழுமலையானை வழிபட்ட முஸ்லிம்கள்

கடப்பா: ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள ஏழுமலையான் கோயிலில் முஸ்லிம்கள் உகாதி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி பண்டிகை ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நேற்று முன்தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயில் உட்பட அனைத்து கோயில்களிலும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். இதுபோல் ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள தேவுண்ணி கடப்பா ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வர சுவாமி கோயிலிலும் திரளான பக்தர்கள் வழிபட்டனர். … Read more

விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இந்தியா எப்படி இருந்தது? – சுனிதா வில்லியம்ஸ் சுவாரஸ்ய பதில்

விண்வெளியில் இருந்து பார்க்கும்போது இந்தியா எப்படி இருந்தது? என்ற கேள்விக்கு சுனிதா வில்லியம்ஸ் அளித்த சுவாரஸ்ய பதில் கவனம் பெற்றுள்ளது. விண்வெளியில் அதிக நாட்களை கழித்த 2-வது அமெரிக்க வீரர் என்ற சாதனையை சுனிதா வில்லியம்ஸ் படைத்துள்ளார். சுனிதா வில்லியம்ஸும் பேரி வில்மோரும் விண்வெளியில் 286 நாட்களை கழித்துள்ளனர். அங்கு 12,13,47,491 மைல் தூரம் பயணித்துள்ளனர். 4,576 முறை பூமியை சுற்றி வந்துள்ளனர். சுனிதா 62 மணி நேரம் 6 நிமிடங்கள் விண்வெளியில் நடந்துள்ளார். இதன்மூலம் அதிக … Read more

நித்தியானந்தா இறந்துவிட்டாரா? வெளியான அதிர்ச்சி தகவல்!

Nithyananda Died: நித்தியானந்தா இறந்துவிட்டதாக தற்போது சமூக ஊடகங்களில் செய்திகள் வேகமாக பரவி வருகிறது. இதனை அவரது சித்தியின் மகன் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.

மேலும் 85ஆயிரம் மருத்துவ மாணவர்களுக்கான இடங்கள் அதிகரிக்கப்படும்! உள்துறை அமைச்சர் அமித்ஷா

டெல்லி:  மோடி அரசு இந்தியாவின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளது,  நாடு முழுவதும் மருத்துவ மாணவர்களுக்கான இடங்கள் 1.15 லட்சமாக அதிகரிக்கப்பட்டு இருப்பதுடன்,   அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 85 ஆயிரம் மருத்துவ படிப்புக்கான இடங்கள் சேர்க்கப்பட உள்ளது  என ஹிசாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். ஹரியானா மாநிலம், ஹிசாரில் உள்ள மகாராஜா அக்ரசென் மருத்துவக் கல்லூரிக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை தந்தார். அப்போது மருத்துவக் கல்லூரி விடுதி, … Read more

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு நோபல் பரிசு வழங்க பரிந்துரை

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தவர், இம்ரான்கான் (வயது 72). முன்னாள் கிரிக்கெட் வீரரான இவர் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் என்ற கட்சியை தொடங்கி அரசியலில் ஈடுபட்டார். இம்ரான்கானுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. நார்வே அரசியல் கட்சியான பார்டியட் சென்ட்ரமின் வக்கீல்கள் பிரிவு இந்த பரிந்துரையை வழங்கி இருக்கிறது. இது தொடர்பாக அந்த கட்சி தனது எக்ஸ் தளத்தில், ‘பாகிஸ்தானில் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு முன்னாள் … Read more

உலகின் முதல் சிவாலயம்; நவகிரக பயம் நீக்கும் அபூர்வ தரிசனம் – உத்திரகோசமங்கை கும்பாபிஷேகம் ஸ்பெஷல்

பாண்டிய நாட்டின் பதினான்கு சிவத் தலங்களுக்கு முன்பாக உருவான தலம் உத்திரகோசமங்கை. இலந்தை மரத்தினடியில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளிய இந்தத் தலத்தில்தான், சிவபெருமான் அம்பிகைக்கு வேதாகம ரகசியப் பொருளை உபதேசித்து அருளினார் என்கின்ற ஞான நூல்கள். ‘உத்திரம்’ என்றால் ரகசியம்; ‘கோசம்’ என்றால் உபதேசித்தல் என்று பொருள். இந்த அற்புதத்தையொட்டியே இந்தத் தலம் ‘திருஉத்திரகோச மங்கை’ என்று அழைக்கப்படுகிறது. இதுவே உலகின் முதல் சிவாலயம் என்பார்கள் பெரியோர்கள். மூலவர் சுயம்புத் திருமேனியராக சதுர ஆவுடையாருடன் திகழ்கிறார். … Read more

மெட்ரோ ரயில் பழைய பயண அட்​டை​யை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு

சென்னை: மெட்ரோ ரயில் பயணிகள் ஏப்.1-ம் தேதி முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு (சிங்கார சென்னை அட்டை) மாற வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஆலந்தூர் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பழைய பயண அட்டையின் பயன்பாட்டை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயி​லில் டிக்​கெட் எடுப்​ப​தற்​காக கவுன்ட்​டர்களில் பயணி​கள் வரிசை​யில் நெடுநேரம் காத்​திருப்​பதை தவிர்க்க, சிஎம்​ஆர்​எல் பயண அட்டை கடந்த 2015-ம் … Read more

சமூக வலைதளங்களில் சக்கைபோடு போடும் ‘கிப்லி’ அனிமேஷன் புகைப்படங்கள்

இன்​றைய நவீன யுகத்​தில் சமூக வலை​தளங்​களில் புதிய புதிய அப்​டேட்​கள் அவ்​வப்​போது வைரலாகி கொண்டு வரு​கின்​றன. கடந்த சில நாட்​களாக ஃபேஸ்​புக், வாட்​ஸ்​அப், இன்​ஸ்​டாகி​ராம், எக்ஸ் தளங்​களில் முழு ட்ரெண்​டிங்​கில் இருப்​பது இந்த ‘கிப்​லி’(Ghibli) ஆர்ட் எனப்​படும் அனிமேஷன் புகைப்​படங்​கள்​தான். ஜப்​பானைச் சேர்ந்த ‘ஸ்​டூடியோ கிப்​லி’ என்ற நிறு​வனம் தயாரித்த அனிமேஷன் திரைப்​படங்​கள் உலகம் முழு​வதும் பிரபல​மானவை. இந்த கிப்லி ஸ்டைல் படங்​களுக்கு உலகம் முழு​வதும் தனி ரசிகர் பட்​டாளம் உள்​ளது. கற்பனை​யாக நினைக்​கும் மன ஓட்​டங்​களுக்கு … Read more

ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல புதிய கட்டுப்பாடு! தமிழக அரசு அறிவிப்பு!

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பை தொடர்ந்து ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு வருகை தரும் வாகனங்கள் இ-பாஸ் பெற வேண்டும் என்ற விதி அமலுக்கு வந்துள்ளது.