சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி

கோடா ஜார்க்கண்ட் மாநிலத்தில் சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் கோடா மாவட்டத்தில் உள்ள லால்மதியா நிலக்கரி சுரங்கங்களை மேற்கு வங்காளத்தில் உள்ள ஃபராக்கா அனல் மின் நிலையத்துடன் இணைக்கும் ரயில் பாதை மெர்ரி-கோ-ரவுண்ட்.  இந்த ரயில் பாதை  NTPC ஆல் நிர்வகிக்கப்படுகிறது. இந்த பாதையில் இன்று(ஏப்ரல்.01) அதிகாலை 3  மணியளிவில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டு விபத்தில் சிக்கியது.   இந்த விபத்தில் 2 லோகோ … Read more

'உ.பி-ல் தமிழ் கற்று தருகிறோம்' கூறும் யோகி ஆதித்யநாத்; 'தரவுகள் எங்கே?' கேட்கும் கார்த்தி சிதம்பரம்

சமீபத்திய பாட்காஸ்ட்டில், உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், “உத்தரப்பிரதேசத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கனடா, பெங்காலி, மராத்தி கற்று தருகிறோம். இதனால், உத்தரப்பிரதேசத்தில் புதிய வேலைவாய்ப்புகளும், வேலைகளும் உருவாகின்றன. தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காக மொழி சர்ச்சையை கிளப்புகிறவர்கள் அவர்களுடைய அரசியல் நோக்கங்களை அடையலாம். ஆனால், அவர்கள் இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றனர்” என்று பேசியிருந்தார். ‘நான் முழு நேர அரசியல்வாதி அல்ல!’ – யோகி ஆதித்யநாத் கார்த்தி சிதம்பரம்தரவுகளை கொடுக்க முடியுமா? இதற்கு பதிலளிக்கும் விதமாக, மக்களவை … Read more

ராமேசுவரம் வரும் பிரதமர் மோடிக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்: மீனவர் காங்கிரஸ் அறிவிப்பு

ராமேசுவரம்: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மற்றும் புதுச்சேரி மாநில மீனவர்களை விடுதலை செய்ய அந்நாட்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமேசுவரம் வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தப்படும் என அகில இந்திய மீனவர் காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது குறித்து அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னான்டோ வெளியிடுள்ள அறிக்கையில், “கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2025 தற்போதைய மார்ச் … Read more

‘மனசாட்சியை உலுக்குகிறது!’ – உ.பி. அரசின் புல்டோசர் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்

புதுடெல்லி: உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் சிலரது வீடுகள் ‘புல்டோசர் நடவடிக்கை’யின்படி இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், “இது எங்களின் மனசாட்சியை உலுக்குகிறது” என்று வேதனை தெரிவித்துள்ளது. பிரயாக்ராஜ் நகரில் உள்ள தங்கள் வீடுகளை உத்தரப் பிரதேச அரசும், பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையமும் இடித்துவிட்டதாக பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் சுல்பிகர் ஹைதர், பேராசிரியர் அலி அகமது உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள், நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா மற்றும் உஜ்ஜல் பூயான் ஆகியோர் … Read more

ஜெய்லர் 2 எப்படி இருக்கும்.. யோகிபாபு சொல்லும் அந்த விஷயம்!

நடிகர் ரஜினிகாந்த் ஜெய்லர் 2 படத்தில் நடித்து வரும் நிலையில், அப்படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்துள்ளார் நடிகர் யோகிபாபு. 

பொறுப்பற்ற பண்ட்… வெச்சு செய்யும் நெட்டிசன்கள்.. ரூ.27 கோடியும் கோவிந்தாவா…?

கடந்த ஆண்டு இறுதியில் நடந்த மெகா ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் ரூ. 27 கோடி கொடுத்து ரிஷப் பண்டை ஏலத்தில் எடுத்தனர். ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரருக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும். இது கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது. பெரிய தொகை கொடுத்து வாங்கி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வழிநடத்தும் பொறுப்பையும் அணி நிர்வாகம் வழங்கியதால், ரிஷப் பண்ட் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர் மீது வைக்கப்பட்ட எதிர்பார்ப்புக்கு … Read more

உக்ரைன் போரை நிறுத்தம் தொடர்பாக அமெரிக்கா முன்மொழிந்த அமைதி ஒப்பந்தத்தை ரஷ்யா நிராகரித்தது

உக்ரைனுடன் போர்நிறுத்தம் குறித்து அமெரிக்கா முன்மொழிந்துள்ள திட்டத்தில் ‘போரின் மூல காரணத்தை தீர்க்க’ எந்த ஒரு குறிப்பும் இல்லை என்று ரஷ்யா கூறியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் இந்த போர்நிறுத்த திட்டத்தை நிராகரித்துள்ள ரஷ்யா புதிய கோரிக்கைகளை வெளியிட்டு டிரம்பை உசுப்பேற்றியுள்ளது. அமெரிக்க திட்டங்களை ரஷ்யா “மிகவும் தீவிரமாக” பரிசீலித்தாலும், பரிந்துரைக்கப்பட்ட போர்நிறுத்தத்தின் விதிமுறைகளில் கிரெம்ளின் அதிருப்தி அடைந்துள்ளதாக துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் கூறினார். விளாடிமிர் புடினின் முக்கியக் கோரிக்கையான “மோதலின் மூல காரணங்களில்” … Read more

MI: பும்ரா டு அஸ்வனி குமார்! உள்ளூர் திறமைகளை அள்ளும் மும்பையின் Scouting டீம் எப்படி செயல்படுகிறது?

‘மும்பையின் அறிமுக வீரர்கள்!’ மும்பை இந்தியன்ஸ் அணி சீசனின் தொடக்கத்திலேயே ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது. மூன்று போட்டிகளில் ஆடி ஒன்றில் தான் வென்றிருக்கிறார்கள். அதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால், ஆடிய மூன்று போட்டிகளுக்குள் மூன்று இளம் வீரர்களை அணிக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். விக்னேஷ் புத்தூர், சத்யநாராயண ராஜூ, அஸ்வனி குமார் என அவர்கள் அறிமுகப்படுத்தியிருக்கும் மூவரும் நம்பிக்கையளிக்கும் வகையில் ஆடியிருக்கிறார்கள். விக்னேஷ் புத்தூர் ஐ.பி.எல் மொத்தமாக ஸ்டார் வீரர்களை நம்பி நகர்ந்து கொண்டிருக்கையில், மும்பை அணி அனுபவமே இல்லாத இளம் வீரர்களை … Read more

அங்கன்வாடி ஊழியராக கருணை அடிப்படையில் பெண் வாரிசுக்கே வேலை: சமூக நலத்துறை செயலர் ஆஜராகி விளக்கம்

சென்னை: அங்கன்வாடி பணியாளராக கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே வேலை வழங்கப்படும் என தமிழக அரசின் சமூக நலத்துறை செயலர் உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்துள்ளார். அங்கன்வாடி பணியாளராக பணியாற்றிய தனது தாயார் உயிரிழந்த நிலையில், கருணை அடிப்படையில் அந்த வேலையை தனக்கு வழங்கக் கோரி விழுப்புரத்தை சேர்ந்த விக்ரம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி பணியாளராக வேலை வாய்ப்பு வழங்கப்படும் … Read more

அரசியல் கட்சிகளுடன் நாடு முழுவதும் இதுவரை 4,719 கூட்டங்கள்: தேர்தல் ஆணையம் தகவல்

புதுடெல்லி: அரசியல் கட்சிகளுடனான தேர்தல் ஆணையத்தின் மிகப் பெரிய முன்னெடுப்பாக மார்ச் 31 நிலவரப்படி மொத்தம் 4,719 கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நாடு முழுவதும் அரசியல் கட்சிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனைகளை நடத்தி வருகிறது. தேர்தல் நடத்தும் அதிகாரி, மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் தலைமை தேர்தல் அதிகாரி மட்டத்தில் இந்த ஆலோசனை கூட்டங்கள் நடைபெறுகின்றன. 2025 மார்ச் 31 நிலவரப்படி … Read more