உலகளவில் தங்கத்தின் விலை 38% குறையும் என்று அமெரிக்க பங்குச் சந்தை நிபுணர் ஜான் மில்ஸ் கணிப்பு

உலக அளவில் தங்கத்தின் விலை அதிரடியாக குறையக் கூடும் என பங்குச் சந்தை நிபுணர்கள் கூறியுள்ளனர். ஒரு அவுன்ஸ் தங்கம் $3,080-க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் அது $3,300 ஐ எட்டும் என்றும் இரண்டு ஆண்டுகளில் $3,500 ஆக உயரும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் மில்ஸ் என்ற பங்குச் சந்தை நிபுணரின் கணிப்புப்படி தற்போது உச்சத்தில் இருக்கும் தங்கத்தின் விலை சட்டென்று அதிரடியாக 38% வீழ்ச்சி … Read more

ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; அரையிறுதியில் கோவா – பெங்களூரு அணிகள் இன்று மோதல்

பெங்களூரு, 13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று முடிவில் மோகன் பகான் சூப்பர் ஜெயன்ட்ஸ், எப்.சி. கோவா, பெங்களூரு எப்.சி., ஜாம்ஷெட்பூர் எப்.சி. ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. ஒவ்வொரு அரையிறுதியும் இரண்டு ஆட்டங்கள் (உள்ளூர், வெளியூர்) கொண்டதாக நடத்தப்படுகிறது. இந்த நிலையில் பெங்களூருவில் இன்று நடைபெறும் அரையிறுதியின் முதலாவது சுற்றில் பெங்களூரு அணி, எப்.சி. கோவாவை எதிர்கொள்கிறது. இந்த தொடரில், ஏற்கனவே லீக் … Read more

பணத்தகராறு… பெற்ற தந்தையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மகன் – நெல்லையில் பயங்கரம்!

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை அருகில் உள்ள சிவந்திபட்டியைச் சேர்ந்தவர் பூலையா. இவருக்கும், இவருடைய மகன் கணேசனுக்கும் சொத்துத் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில், பூலையா கடந்த 20 நாட்களுக்கு முன்பு தனக்கு சொந்தமான நிலத்தை ரூ.1 கோடியே 50 லட்சத்திற்கு விற்பனை செய்துள்ளார். இதில், ரூ.50 லட்சம் பணத்தை பூலையா, தன் மகன் கணேசனுக்கு பங்காகக்  கொடுத்துள்ளார். தந்தை பூலையா- மகன் கணேசன் இந்த நிலையில், கணேசன் அவரது வீட்டின் அருகில் புதிகாக வேறொரு வீடு … Read more

“பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகளை அணி திரட்ட வேண்டும்!” – மதுரை மார்க்சிஸ்ட் மாநாட்டில் பிரகாஷ் காரத் முழக்கம்

மதுரை: “பாஜவுக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் அணி திரட்ட வேண்டும்” என மதுரை அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் அக்கட்சியின் அரசியல் பணியக ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் முழங்கினார். மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 5 நாள் அகில இந்திய 24-வது மாநாடு தமுக்கம் மைதானத்தில் இன்று (ஏப்.2) காலை தொடங்கியது. மாநாட்டில் அரசியல் பணியக ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் பேசியது: “பழந்தமிழ் இலக்கியம், கலாச்சாரத்தின் பண்பாட்டின் செழுமையும், தொழிலாளி வர்க்கம், கம்யூனிஸ்ட் … Read more

‘வக்பு நிலங்களில் மருத்துவமனை, பள்ளிகள் கட்ட வேண்டும்’ – பிரதமருக்கு மதுரா துறவி கடிதம்

புதுடெல்லி: வக்பு நிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் கட்டப்பட வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்த இந்து மதத் துறவி தினேஷ் ஃபலாஹரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தனது ரத்தத்தால் அந்தக் கடிதத்தை அவர் எழுதியிருக்கிறார். மதுராவின்ஸ்ரீ கிருஷ்ணஜென்மபூமி கோயிலை ஒட்டியுள்ள கியான்வாபி மசூதியை அகற்றுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர் துறவி தினேஷ் ஃபலாஹரி. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு செய்த ஒரு சபதத்தின்படி, இவர் காலணி அணிவதில்லை. மதுராவைச் சேர்ந்த துறவியான … Read more

என்னை பார்த்ததும் கேட்கும் முதல் கேள்வி இதுதான்.. விஜயகாந்த் குறித்து சுவாரஸ்யம் பகிர்ந்த குஷ்பு!

நடிகை குஷ்பு கேப்டன் விஜயகாந்த் குறித்து முன்பு அளித்த பேட்டி ஒன்றில் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து உள்ளார். 

வாயை கொடுத்து வாங்கி கட்டிய ரிஷப் பண்ட்.. பஞ்சாப் கொடுத்த பதிலடி.. வைரலாகும் வீடியோ!

2025 ஐபிஎல் தொடருக்கு முன்பு கடந்த டிசம்பர் மாதம் மெகா ஏலம் நடைபெற்றது. அப்போது, ரிஷப் பண்ட் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டார். அவரை லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணி 27 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. அவருக்கு அடுத்தபடியாக ஷ்ரேயாஸ் ஐயரை 26.50 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது.  டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் கழற்டிவிடப்பட்ட ரிஷப் பண்ட் தனது அணிக்கு வெற்றிகரமான கேப்டனாக இருப்பார் என நம்பி லக்னோ அணியின் … Read more

Living together: முன்னாள் காதலனை கடத்தி ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டிய இளம்பெண் உள்ளிட்ட 4 பேர் கைதe

லிவிங் டு-கெதரில் இருந்த ஜோடி பிரிந்த நிலையில் காதலனை கடத்தி ரூ. 10 லட்சம் கேட்டு இளம்பெண் மிரட்டியுள்ளார். இந்த சம்பவம் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்றுள்ளது, ஜார்படா பகுதியைச் சேர்ந்த சோம்நாத் ஸ்வைன் என்ற நபர் கடத்தப்பட்டதாக காவல்துறைக்கு நேற்றிரவு 10:30 மணிக்கு தகவல் கிடைத்துள்ளது. சோம்நாத்தின் சகோதரி அளித்த அந்த புகாரில் கடத்தியவர்கள் ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டல் விடுப்பதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து சோம்நாத்தின் மொபைல் தரவுகள் மற்றும் உளவுப் பிரிவினரின் தகவலை … Read more

உலகின் ஒவ்வொரு தலைவரிடமும் பேச முடியும்: பிரதமர் மோடிக்கு சிலி அதிபர் புகழாரம்

புதுடெல்லி, பிரதமர் மோடியின் அழைப்பையேற்று இந்தியாவுக்கு வருகை தந்துள்ள சிலி அதிபர் கேப்ரியெல் போரிச் பான்ட், ஜனாதிபதி மாளிகையில் உரையாற்றினார். அப்போது, பிரதமர் மோடியின் உலகளாவிய தலைமைத்துவ திறன்களை பாராட்டி பேசினார். அவர் பேசும்போது, பிரதமர் மோடி, நீங்கள் தற்போது உலகின் ஒவ்வொரு தலைவரிடமும் பேச முடியும் என்ற அந்தஸ்து பெற்றுள்ளீர்கள். நீங்கள் டிரம்ப், ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய யூனியன் அமைப்பை ஆதரிக்கிறீர்கள். கிரீஸ் நாட்டில் உள்ள லத்தீன் அமெரிக்க தலைவர்கள் அல்லது ஈரான் தலைவர்களுக்கும் ஆதரவு தெரிவிக்கிறீர்கள். … Read more

விக்கெட் வீழ்த்திய பின் வித்தியாசமான கொண்டாட்டம்… லக்னோ வீரருக்கு அபராதம் விதிப்பு

லக்னோ, ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – லக்னோ அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 171 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 44 ரன் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த பஞ்சாப் அணி 16.2 … Read more