கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் 92.10 லட்சம்  பேர் பயணம்

சென்னை கடந்த மாதம் சென்னை  மெட்ரோ ரயிலில் 92.10 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையில் உள்ள மக்களுக்கும். மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 92,10,069 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நடப்பாண்டு ஜனவரி … Read more

ஒன் பை டூ

டி.ஜெயக்குமார், முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க “உண்மை நிலவரம் தெரியாமல் பேசியிருக்கிறார் விஜய். மூன்று கோடிக் கட்சித் தொண்டர்கள், 52 வருட அரசியல் கட்சி, 30 வருட ஆட்சிப் பொறுப்பு என்று தமிழக அரசியலில் மட்டுமன்றி, இந்திய அரசியலிலும் அசைக்க முடியாத அசுர பலத்துடன் இருக்கிறது அ.தி.மு.க. இன்று மட்டுமல்லாமல், எப்போதுமே தமிழகத்தில் தி.மு.க-வை எதிர்ப்பதற்கு, வெல்வதற்கு… அ.தி.மு.க-வைத் தாண்டி வேறொரு கட்சி இல்லை என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். இந்த நிலையை யாராலும் மாற்ற முடியாது. … Read more

‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தில் கட்சிப் பாகுபாடு இல்லை: பேரவையில் உதயநிதி விளக்கம்

சென்னை: உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் கட்சி பாகுபாடு பாராமல் செயல்படுத்தப்பட்டு வருவதாக சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்தார். சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்த பேசிய பிறகு ‘உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்’ தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அவர் பேசியது: “எதிர்க்கட்சித் தலைவரும், உறுப்பினர்களும், ‘உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம்’ குறித்துப் பேசினர். அது … Read more

குஜராத் பட்டாசு ஆலையில் தீ விபத்து – 18 பேர் உயிரிழப்பு; 5 பேர் காயம்

பனஸ்கந்தா: குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நேற்று நடைபெற்ற பட்டாசு விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர், 5 பேர் காயம் அடைந்தனர். குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ளது தீசா நகரம். இங்குள்ள பட்டாசு ஆலையில் ஊழியர்கள் நேற்று பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை 9.45 மணியளவில் பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்த பட்டாசு ஆலை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. அங்கு தீயணைப்பு படையினர் விரைந்து … Read more

சீனாவும் இந்தியாவும் இன்னும் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும்: சீன அதிபர் ஜி ஜின்பிங் விருப்பம்

பெய்ஜிங்: சீனாவும் இந்தியாவும் இன்னும் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் சீன அதிபர் ஜி ஜின்பிங் விருப்பம் தெரிவித்தார். இந்தியாவும் சீனாவும் தங்களுக்கு இடையில் ராஜதந்திர உறவுகளை கடந்த 1950-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி ஏற்படுத்திக் கொண்டன. இதன் 75-ம் ஆண்டு தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் நேற்று வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். அப்போது திரவுபதி முர்முவிடம், “சீனாவும் இந்தியாவும் … Read more

ஸ்ரீராமர் ரத யாத்திரை அனுமதி மறுப்பு : உயர்நீதிமன்றத்தில் காவல்துறை அறிவிப்பு

சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீராமர் யாத்திரைக்கு அனுமதி அளிக்க மறுத்துள்ளதாக கால்வதுரை அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி ஸ்ரீராம நவமி தினத்தையொட்டி சேலம் அயோத்தியப்பட்டினத்தில் ராம ரத யாத்திரை நடத்த அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி சேலம் மாவட்ட தலைவர் பெரியசாமி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், ”ஸ்ரீராம ரத யாத்திரை சிறப்பு பூஜைகளுடன் சேலம் அயோத்தியாபட்டினம் தொடங்கி, உடையப்பட்டி அம்மாப்பேட்டை ரவுண்டானா வழியாக சவுந்தரராஜா பெருமாள் கோவிலில் தீபாராதனை … Read more

தமிழகத்தில் ரூ.2,200 கோடியில் 770 கி.மீ நீள சாலைகள் அகலப்படுத்தப்படும்: பேரவையில் புதிய அறிவிப்புகள்

சென்னை: முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.2,200 கோடி மதிப்பீட்டில் 770 கிலோ மீட்டர் நீள சாலைகள் அகலப்படுத்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை சட்டப்பேரவையில் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டார். சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை, பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் பேசினர். அதற்கு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்துப் பேசிய பிறகு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் வருமாறு: > உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் சட்டப்பேரவை உறுப்பினர்களிடமிருந்து … Read more

2026-ல் மாவோயிஸ்ட் தீவிரவாதம் வேரறுக்கப்படும்: மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி

புதுடெல்லி: வரும் 2026-ம் ஆண்டில் மாவோயிஸ்ட் தீவிரவாதம் வேரறுக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலங்கானா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் குறிப்பிட்ட மாவட்டங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளின் ஆதிக்கம் இருந்தது. கடந்த 2015-ம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி இந்த மாநிலங்களை சேர்ந்த 35 மாவட்டங்களில் மாவோயிஸ்ட் தீவிரவாத பிரச்சினை நீடித்தது. கடந்த 2018-ம் ஆண்டில் மாவட்டங்களின் எண்ணிக்கை 30 ஆகவும் கடந்த 2021-ம் ஆண்டில் 25 … Read more

இந்திய விவசாய பொருட்கள் மீது 100% வரி: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தீவிர ஆலோசனை

நியூயார்க்: இந்தியாவின் விவசாய பொருட்கள் மீது 100% வரை வரி விதிப்பது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிரம்ப் நிர்வாகம் ஏப்ரல் 2-ம் தேதி முதல் பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாய பொருட்களின் மீதும் 100 சதவீத வரிகளை விதிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் … Read more

புவிசார் குறியீடு பெற்ற கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலை

சென்னை புவிசார் குறியீடு கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலைக்கு அளிக்கப்ப்பட்டுள்ளது. புவிசார் குறியீடு ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் தனித்துவமாக உற்பத்தியாகக் கூடிய பொருட்களுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு குறியீடு பெறப்படுவதன் மூலம் அந்த குறிப்பிட்ட பொருட்களுக்கு சட்டப் பாதுகாப்பு கிடைக்கிறது. மேலும் இந்த புவிசார் குறியீடு அங்கீகாரம் தனிநபருக்கான உரிமை இல்லை என்பதால்அந்த பகுதியில் உள்ள அனைவருக்குமான உரிமையாக பார்க்கப்படுகிறது. இதற்கு மதுரை மல்லி, காஞ்சீபுரம் பட்டு ஆகியவற்றை உதாரணமாக சொல்ல முடியும். இந்த குறியீட்டை … Read more