நாடாளுமன்றத்தில் திருத்தப்பட்ட வக்பு மசோதா நாளை தாக்கல்

புதுடெல்லி, வக்பு சொத்துகளை ஒழுங்குபடுத்துவதற்காக, வக்பு சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தாக்கல் செய்தார். அந்த மசோதா, முஸ்லிம்களுக்கு எதிரானது என்றும், வக்பு சொத்துகளை முறைகேடாக அபகரிக்கும் நோக்கம் கொண்டது என்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதனால், நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. அக்குழு, பல்வேறு திருத்தங்களுடன் மசோதாவையும், தனது அறிக்கையையும் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. இந்நிலையில், ரம்ஜான் விடுமுறைக்கு பிறகு நாடாளுமன்ற … Read more

மும்பைக்கு எதிரான தோல்விக்கு இதுதான் காரணம் – ரஹானே பேட்டி

மும்பை, ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, மும்பை வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக வெறும் 16.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த கொல்கத்தா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 26 ரன் எடுத்தார். மும்பை … Read more

இந்தியாவை பற்றி சீனாவில் யூனுஸ் பரபரப்பு பேச்சு; மத்திய அரசு பதிலடி

புதுடெல்லி, வங்காளதேச இடைக்கால அதிபர் மற்றும் தலைமை ஆலோசகரான முகமது யூனுஸ், சீனாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்நாட்டில் அவர் பேசும்போது, இந்தியாவின் 7 வடகிழக்கு மாநிலங்கள் நிலப்பரப்பால் சூழப்பட்டு உள்ளன. இந்திய பெருங்கடலை அடைவதற்கு அவர்களிடம் வழி கிடையாது. நாங்கள் மட்டுமே பெருங்கடலின் ஒரே பாதுகாவலர் என பேசினார். வங்காளதேசம் வழியே ஆழ்ந்த பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபட சீனாவுக்கு அழைப்பு விடும் வகையில் பேசும்போது, இந்தியாவை பற்றி அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. … Read more

நடுரோட்டில் நடனமாடிய மனைவி; சஸ்பெண்ட் ஆன கான்ஸ்டபிள்.. வைரல் வீடியோவால் நடவடிக்கை

சமூக வலைதளத்தில் வீடியோக்களை பதிவு செய்து அதிகமானோர் சம்பாதிக்கின்றனர். சிலர் பொழுதுபோக்கிற்காக இது போன்று சமூக வலைதளத்தில் வீடியோக்களை பகிர்வதுண்டு. அந்த வீடியோ சில நேரங்களில் அதனை வெளியிட்டவர்களுக்கே பிரச்னையை ஏற்படுத்திவிடும். சண்டிகரில் ஒரு பெண் அது போன்று ஒரு வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு தனது கணவரின் வேலைக்கு குழி பறித்துவிட்டார். சண்டிகரில் சீனியர் கான்ஸ்டபிளாக இருப்பவர் அஜய். இவரது மனைவி ஜோதி. சமூக வலைத்தளத்தில் ஜோதிக்கு அதிக ஈடுபாடு உண்டு. தனது மைத்துனி பூஜாவுடன் … Read more

‘டாஸ்மாக் சோதனைக்கு எதிரான தமிழக அரசின் வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்க’ – அமலாக்கத் துறை மனு

சென்னை: அமலாக்க துறையின் சட்டப்பூர்வமான விசாரணையை சீர்குலைக்கும் வகையில், முன்கூட்டியே தமிழக அரசு தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. சோதனைக்கு எதிராக அமலாக்கத் துறையிடம் முறையிடும் மாற்று வாய்ப்பு உள்ள போதும், அதை அணுகி நிவாரணம் கோராமல் நேரடியாக உயர் நீதிமன்றத்தை நாடியது தவறு. எனவே, இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும், என டாஸ்மாக் நிறுவனத்தில் நடத்திய சோதனைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கில், அமலாக்கத் துறை பதில்மனு தாக்கல் செய்துள்ளது. … Read more

தொண்டு நிறுவனத்துக்கு தான் அதிக நிதி: ரத்தன் டாடாவின் உயில் விவரம்!

புதுடெல்லி: ரத்தன் டாடாவின் அதிகப்படியான சொத்துகள் அவரின், தொண்டு நிறுவனங்களுக்குத்தான் கிடைக்கும் என அவர் எழுதிவைத்த உயிலின் மூலம் மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவர் தனது செல்லப்பிராணிகளுக்காக ரூ.12 லட்சத்தை நிதியாக ஒதுக்கியுள்ளார். பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா, அக்டோபர் 9, 2024 உடல் நலக்குறைவால் காலமானார். அவரின் சொத்துக்கள் யார் யாருக்கு கிடைக்க வேண்டும் என்று ரத்தன் டாடா உயில் எழுதி இருந்தார். அதில், டாடா சன்ஸ் பங்குகள் உட்பட தனது … Read more

ChatGPT-யில் கிபிலி பாணி ஓவியங்கள் இலவசமாக கிடைக்கும்: ஓபன் ஏஐ சிஇஓ அறிவிப்பு

புதுடெல்லி: ஸ்டுடியோ கிப்லி பாணியில் படங்களை உருவாக்க ChatGPT ஐப் பயன்படுத்தும் சமீபத்திய போக்கு அதிகரித்துள்ள நிலையில், இனி இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார் ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன். பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என எங்கும் பரவிக் கிடக்கிறது ஸ்டூடியோ கிபிலி பாணியில் சமூகவலைதள பயன்பாட்டாளர்கள் உருவாக்கிக் கொண்ட புகைப்படங்கள். செல்ஃபி எடுத்து அதை கிபிலி பாணி இமேஜாக மாற்றுவது தொடங்கி அரசியல் பிரபலங்கள் படம் வரை இந்த பாணியில் ஜெனரேட் செய்து … Read more

வீட்டுக்கு கிளம்பிய அஞ்சலி.. டென்ஷனான மனோஜ், லட்சுமி சொன்ன வார்த்தை – கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

Kettimelam Today’s Episode Update: அஞ்சலி அம்மா வீட்டுக்கு செல்வதாக சொன்னதும் மகேஷ் டென்ஷனான இலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

நீக்கப்படும் அண்ணாமலை…? புதிய பாஜக மாநில தலைவர் யார்…? முந்தும் முக்கிய தலைகள்!

Tamil Nadu BJP News: பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

IPL 2025: ஐபிஎல்லில் பணக்கார பயிற்சியாளர் யார் தெரியுமா?

இந்தியன் பிரீமியர் லீக் உலக அளவில் அனைவராலும் பார்க்கப்படும் ஒரு முக்கியமான கிரிக்கெட் தொடராக உள்ளது. உலக அளவில் மற்ற லீக் போட்டிகளை விட அதிக பணம் ஈட்டும் தொடராக இருப்பதால் உலக அளவில் உள்ள பல வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இந்த தொடரில் இடம் பெற்று வருகின்றனர். நட்சத்திர வீரர்களைத் தாண்டி நட்சத்திர பயிற்சியாளர்களும் ஐபிஎல்லில் உள்ளனர். அவர்களின் அனுபவம் மற்றும் திறமையை வைத்து தங்களது அணிகளை வெற்றி பெற செய்கின்றனர். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தென்னாபிரிக்கா … Read more