மெட்ரோ ரயில் பழைய பயண அட்​டை​யை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிக்க முடிவு

சென்னை: மெட்ரோ ரயில் பயணிகள் ஏப்.1-ம் தேதி முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு (சிங்கார சென்னை அட்டை) மாற வேண்டும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஆலந்தூர் உள்ளிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பழைய பயண அட்டையின் பயன்பாட்டை மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிப்பதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயி​லில் டிக்​கெட் எடுப்​ப​தற்​காக கவுன்ட்​டர்களில் பயணி​கள் வரிசை​யில் நெடுநேரம் காத்​திருப்​பதை தவிர்க்க, சிஎம்​ஆர்​எல் பயண அட்டை கடந்த 2015-ம் … Read more

சமூக வலைதளங்களில் சக்கைபோடு போடும் ‘கிப்லி’ அனிமேஷன் புகைப்படங்கள்

இன்​றைய நவீன யுகத்​தில் சமூக வலை​தளங்​களில் புதிய புதிய அப்​டேட்​கள் அவ்​வப்​போது வைரலாகி கொண்டு வரு​கின்​றன. கடந்த சில நாட்​களாக ஃபேஸ்​புக், வாட்​ஸ்​அப், இன்​ஸ்​டாகி​ராம், எக்ஸ் தளங்​களில் முழு ட்ரெண்​டிங்​கில் இருப்​பது இந்த ‘கிப்​லி’(Ghibli) ஆர்ட் எனப்​படும் அனிமேஷன் புகைப்​படங்​கள்​தான். ஜப்​பானைச் சேர்ந்த ‘ஸ்​டூடியோ கிப்​லி’ என்ற நிறு​வனம் தயாரித்த அனிமேஷன் திரைப்​படங்​கள் உலகம் முழு​வதும் பிரபல​மானவை. இந்த கிப்லி ஸ்டைல் படங்​களுக்கு உலகம் முழு​வதும் தனி ரசிகர் பட்​டாளம் உள்​ளது. கற்பனை​யாக நினைக்​கும் மன ஓட்​டங்​களுக்கு … Read more

ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்ல புதிய கட்டுப்பாடு! தமிழக அரசு அறிவிப்பு!

சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பை தொடர்ந்து ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு வருகை தரும் வாகனங்கள் இ-பாஸ் பெற வேண்டும் என்ற விதி அமலுக்கு வந்துள்ளது.

Vikram: “வீர தீர சூரன் அடுத்தடுத்த பாகங்கள் சீக்கிரமே வரும்'' – விக்ரம் கொடுத்த அப்டேட்

அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, பிருத்வி, சூரஜ் வெஞ்சாரமூடு, துஷாரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வீர தீர சூரன் பாகம் -2’.  பல்வேறு தடைகளுக்குப் பிறகு கடந்த வியாழக்கிழமை (மார்ச் 27) மாலை வெளியாகியிருந்தது இப்படம். ஊர்த் திருவிழாவின்போது சொந்த ஊர் ரௌடி கும்பல் மற்றும் போலீஸ் இடையே மாட்டிக் கொண்டு தன் குடும்பத்தை காப்பாற்றுவதற்காவும், தன்னைச் சுற்றி இருக்கும் பிரச்னைகளை முடிவுக்குக் கொண்டுவரவும் போராடும் விக்ரமின் ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படமான இது, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் … Read more

விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை! அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: விடுபட்ட மகளிருக்கு இன்னும் 3 மாதத்தில் மகளிர் உரிமைத் தொகை  வழங்கப்படும் என்று  அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதி தெரிவித்தார். விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு அரசு பெண்களுக்கு வழங்கி வரும் உரிமைத் தொகைக்கு மேலும் ஏராளமானோர் விண்ணப்பித்து உள்ளனர். விடுபட்ட மகளிருக்கு உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.   இன்னும் 3 மாதங்களில் இதற்கான விண்ணப்பம் மேலும் பெறப்பட்டு தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 3 மாதத்தில் … Read more

நார்வேயில் தனியார் விண்வெளி நிறுவனம் அனுப்பிய ராக்கெட் கடலில் விழுந்தது

ஓஸ்லோ, விண்வெளிக்கு செயற்கைக்கோள் அனுப்புவதில் உலக நாடுகள் பலவும் போட்டிப்போடுகின்றன. இந்த போட்டியில் தற்போது பல தனியார் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களும் இணைந்துள்ளன. அந்தவகையில் ஜெர்மனியைச் சேர்ந்த இசார் ஏரோஸ்பேஸ் என்ற தனியார் விண்வெளி நிறுவனமானது நார்வேயில் இருந்து சோதனை அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் என்ற ராக்கெட்டை ஏவியது. ஐரோப்பாவில் இருந்து ஏவப்பட்ட முதல் ராக்கெட் இதுவாகும். திட்டமிட்டபடி அந்த ராக்கெட் விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்தது. 30 நொடிகள் வானில் பறந்த அந்த ராக்கெட் பின்னர் சுழன்றடித்துக் கொண்டு … Read more

ரெனால்ட் நிசான் இந்திய கூட்டு ஆலையை ரெனால்ட் கையகப்படுத்துகின்றது | Automobile Tamilan

ரெனால்ட் நிசான் இந்திய (Renault Nissan Automotive India Private Ltd – RNAIPL) கூட்டு ஆலையில் 51 % நிசான் பங்குகளை ரெனால்ட் நிறுவனம் முழுவதுமாக அடுத்த மூன்று மாதங்களுக்குள் கையகப்படுத்தும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரெனால்ட் நிறுவனம் சென்னை ஆலையின் 100% உரிமையை கொண்டிருக்கும். ஆனால் நிசான் கார்கள் தயாரிப்பில் எந்த மாற்றும் இருக்காது. அதேநேரத்தில் ரெனால்ட் நிசான் இந்திய தொழில்நுட்பம் மற்றும் வணிக மையம் (Renault Nissan Technology & Business … Read more

Nidhi Tewari: பிரதமர் நரேந்திர மோடியின் தனி செயலாளராக நியமிக்கப்பட்ட நிதி திவாரி – யார்?

பிரதமர் மோடியின் தனிச்செயலர்களாக ஏற்கெனவே இரண்டு பேர் இருக்கும் நிலையில், கூடுதலாக தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் நிதி திவாரி மீது ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையும் திரும்பியுள்ளது . யார் இந்த நிதி திவாரி? – பிரதமர் மோடியின் நாடாளுமன்றத் தொகுதிக்கு உள்பட்ட பகுதி உத்தரப் பிரதேசத்தின் வாராணசியில் உள்ள மெஹ்முர்கஞ்சை பகுதியைச் சேர்ந்தவர் நிதி திவாரி. வாரணாசியில் உதவி ஆணையராக (வணிக வரி) பணியாற்றிக்கொண்டிருந்த போதே சிவில் சர்வீஸ் தேர்விற்கு தயாராகி கொண்டிருந்த நிதி திவாரி, 2013-ல் சிவில் … Read more

கடலோர காவல்​படை​யில் பெண்​களுக்​கும் ஏராள​மான வேலை​வாய்ப்பு: ஓய்​வு​பெற்ற அதி​காரி நா.சோமசுந்​தரம் தகவல்

சென்னை: இந்​திய கடலோர காவல்​படை​யில் ஆண்​கள் மட்​டுமின்றி பெண்​களுக்​கும் ஏராள​மான வேலை​வாய்ப்​பு​கள் உள்ளன என்று ஓய்வு பெற்ற கடலோர காவல்​படை அதி​காரி கமாண்​டன்ட் நா.சோமசுந்​தரம் தெரி​வித்​தார். ராணுவ விஞ்​ஞானி வி.டில்லி பாபு, சென்னை வியாசர்​பாடி மல்​லிகைப்பூ காலனி​யில் உள்ள தனது இல்​லத்​தில் ‘கலாம் சபா’ நூல​கம் மற்​றும் வழி​காட்டி மையத்தை நடத்தி வரு​கிறார். வடசென்னை பள்ளி மற்​றும் கல்​லூரி மாணவர்​களின் பயன்​பாட்​டுக்​காக அமைக்​கப்​பட்​டுள்ள இந்த மையத்​தில், பள்ளி மாணவர்​கள் மேற்​படிப்பு வாய்ப்​பு​களை அறிந்து கொள்​ள​வும், கல்​லூரி மாணவர்​கள் … Read more

தனிக்கட்சி தொடங்குகிறார் பசனகவுடா

பெங்களூரு: பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும் எம்எல்ஏவுமான‌ பசனகவுடா பாட்டீல் யத்னால் தனிக்கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பீஜாப்பூர் நகர தொகுதியின் பாஜக எம்எல்ஏவும் முன்னாள் மத்திய அமைச்சருமான பசனகவுடா பாட்டீல் யத்னால் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் தனது ஆதரவாளர்களுடன் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பீஜாப்பூரில் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் பசனகவுடா பாட்டீல் யத்னால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: … Read more