ChatGPT-யில் கிபிலி பாணி ஓவியங்கள் இலவசமாக கிடைக்கும்: ஓபன் ஏஐ சிஇஓ அறிவிப்பு

புதுடெல்லி: ஸ்டுடியோ கிப்லி பாணியில் படங்களை உருவாக்க ChatGPT ஐப் பயன்படுத்தும் சமீபத்திய போக்கு அதிகரித்துள்ள நிலையில், இனி இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார் ஓபன் ஏஐ சிஇஓ சாம் ஆல்ட்மேன். பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் என எங்கும் பரவிக் கிடக்கிறது ஸ்டூடியோ கிபிலி பாணியில் சமூகவலைதள பயன்பாட்டாளர்கள் உருவாக்கிக் கொண்ட புகைப்படங்கள். செல்ஃபி எடுத்து அதை கிபிலி பாணி இமேஜாக மாற்றுவது தொடங்கி அரசியல் பிரபலங்கள் படம் வரை இந்த பாணியில் ஜெனரேட் செய்து … Read more

வீட்டுக்கு கிளம்பிய அஞ்சலி.. டென்ஷனான மனோஜ், லட்சுமி சொன்ன வார்த்தை – கெட்டிமேளம் இன்றைய எபிசோட் அப்டேட்

Kettimelam Today’s Episode Update: அஞ்சலி அம்மா வீட்டுக்கு செல்வதாக சொன்னதும் மகேஷ் டென்ஷனான இலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

நீக்கப்படும் அண்ணாமலை…? புதிய பாஜக மாநில தலைவர் யார்…? முந்தும் முக்கிய தலைகள்!

Tamil Nadu BJP News: பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

IPL 2025: ஐபிஎல்லில் பணக்கார பயிற்சியாளர் யார் தெரியுமா?

இந்தியன் பிரீமியர் லீக் உலக அளவில் அனைவராலும் பார்க்கப்படும் ஒரு முக்கியமான கிரிக்கெட் தொடராக உள்ளது. உலக அளவில் மற்ற லீக் போட்டிகளை விட அதிக பணம் ஈட்டும் தொடராக இருப்பதால் உலக அளவில் உள்ள பல வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இந்த தொடரில் இடம் பெற்று வருகின்றனர். நட்சத்திர வீரர்களைத் தாண்டி நட்சத்திர பயிற்சியாளர்களும் ஐபிஎல்லில் உள்ளனர். அவர்களின் அனுபவம் மற்றும் திறமையை வைத்து தங்களது அணிகளை வெற்றி பெற செய்கின்றனர். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தென்னாபிரிக்கா … Read more

இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்படும்! பேரவையில் அமைச்சர் தகவல்…

சென்னை: இந்த ஆண்டு இறுதிக்குள் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை  அமைச்சர் மா.சுப்பிரமணியன்  கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்ற வருகிறது.  3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று அவை மீண்டும் கூடியது. காலையில் வழக்கமான நடை முறைகளுடன்  அவை தொடங்கியது. அவையின் கேள்வி நேரத்தில்  உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அதைத்தொடர்ந்து,   கூடியது. பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை மீதான மானியக் கோரிக்கை மீது விவாதம் தொடங்கி  … Read more

மேற்கு வங்காளம்: சிலிண்டர் வெடித்ததில் 7 பேர் பலி

தெற்கு 24 பர்கானாஸ், மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பதர்பிரதிமா பகுதியில் தோலாகாட் கிராமத்தில் நள்ளிரவில் சமையல் செய்ய பயன்படும் கியாஸ் சிலிண்டர் வெடித்ததில், 4 குழந்தைகள் உள்பட 7 பேர் பலியானார்கள். வீட்டில் 2 சிலிண்டர்களில் ஒன்று திடீரென வெடித்து உள்ளது என போலீசார் தெரிவித்தனர். எனினும், பட்டாசு தயாரிக்கும்போது வெடிவிபத்து ஏற்பட்டது என முதலில் தகவல் வெளியானது. ஆனால், நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி … Read more

சொந்த மைதானத்தில் வெற்றி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது – ஹர்திக் பாண்ட்யா

மும்பை, ஐ.பி.எல் தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, மும்பை வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதன் காரணமாக வெறும் 16.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த கொல்கத்தா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 116 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 26 ரன் எடுத்தார். மும்பை … Read more

டொனால்டு டிரம்ப், எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த சுனிதா வில்லியம்ஸ்

வாஷிங்டன், பூமியில் இருந்து சுமார் 400 கி.மீ. உயரத்தில் உள்ள சுற்றுவட்ட பாதையில் சர்வதேச விண்வெளி நிலையம் உள்ளது. இந்த விண்வெளி நிலையத்துக்கு அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள், குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆராய்ச்சி பணிக்காக சுழற்சி முறையில் விண்கலம் மூலம் அனுப்பப்படுவார்கள்அவர்கள் அங்கு தங்கியிருந்து, தங்கள் பணிகள் முடிந்ததும் மீண்டும் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள். அதுபோல் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா சார்பில், … Read more

கள்ள நோட்டல்ல, கலர் நோட்டு – தப்பிய விசிக கடலூர் மாவட்ட பொருளாளர்; சிக்கிய துப்பாக்கிகள் – பின்னணி?

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அதர்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கடலூர் மேற்கு மாவட்டப் பொருளாளராக பதவி வகித்து வந்தார். இவரும் ஆவட்டி பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் அதர்நத்தம் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணிடம் நட்புடன் பழகி வந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணுடன் யார் பழகுவது என்பதில் செல்வம் மற்றும் சங்கருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக சில தினங்களுக்கு சங்கரின் வீட்டுக்குச் சென்ற செல்வம், … Read more

“அதிமுக, பாஜக மற்றும் தவெக இடையே இரண்டாம் இடத்துக்குத்தான் போட்டி” – திருமாவளவன்

சென்னை: “அண்மையில் நடந்த தவெக முதல் பொதுக்குழுக் கூட்டத்தில் அவர் பேசுகையில், அதிமுக-பாஜக தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக இருக்க முடியாது. தவெக-தான் இரண்டாவது பெரிய கட்சி என்று கூறியுள்ளார். எனவே, பாஜக, அதிமுக மற்றும் தவெக ஆகிய கட்சிகளுக்கிடையே தமிழகத்தில் இரண்டாவது கட்சி யார் என்பதில் தான் போட்டி நடந்துகொண்டிருக்கிறது. இந்தச்சூழலில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது நகைச்சுவையாக இருக்கிறது”, என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் … Read more