ரஜினியின் ‘கூலி’ படம் ரிலீஸ் தேதி.. படக்குழு வெளியிட்ட அப்டேட்

ரஜினியின் ‘கூலி’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தற்போது படம் எப்போது வெளியாகும் என்பது குறித்து படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மீண்டும் தமிழக பாஜக தலைவராக தேர்வாகும் அண்ணாமலை? அவரே சொன்ன பதில்!

பாஜகவில் புதிய தலைவர்களை தேர்ந்தெடுக்க போட்டியெல்லாம் வைக்க மாட்டார்கள். மூத்த தலைவர்கள் முடிவு செய்து தேர்ந்தெடுப்பார்கள். அதனால் தான் நான் போட்டியில் இல்லை என்று சொல்கிறேன் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மீண்டும் சென்னை அணியின் கேப்டன்சி பொறுப்பை ஏற்கும் தல தோனி!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்குவாட்க்கு கடந்த போட்டியின் போது கையில் காயம் ஏற்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, வேகமாக வந்த பந்து அவரது கையை பதம் பார்த்தது. அந்த வலியுடன் அரை சதமும் அடித்து இருந்தால் ருதுராஜ் கெய்குவாட். இந்நிலையில் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி செய்தியாளர் சந்திப்பில் முக்கிய கருத்தை தெரிவித்துள்ளார். “ருதுராஜ் கெய்குவாட் காயம் இன்னும் குணமடையவில்லை. இரவு அவரது காயத்தின் தன்மை பொறுத்து டெல்லி கேபிட்டல்ஸ் … Read more

Coolie Update: கூலி ரிலீஸ் தேதி அறிவிப்பு; இந்த தேதியைத் தேர்ந்தெடுக்க என்ன காரணம் தெரியுமா?

`வேட்டையன்’ திரைப்படத்திற்குப் பிறகு ரஜினி நடித்திருக்கும் `கூலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்திருந்தது. ஷூட்டிங் முடிந்தவுடன் வழக்கமாக மேற்கொள்ளப்படும் கேக் கட்டிங் தருணமும் நடந்திருந்தது. அந்தப் புகைப்படங்களையும் படக்குழுவினர் சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டிருந்தனர். Coolie release date `லியோ’ படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் நாகர்ஜூனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் சாஹிர், ஷ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். `மாஸ்டர்’, `விக்ரம்’, `லியோ’ படங்களைத் தொடர்ந்து இப்படத்திற்கு இசையமைக்க அனிருத் லோகேஷ் … Read more

பெங்களூரு – திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

பெங்களூரு பெங்களூரு – திருவனந்த;புரம் இடையே  கோடைக்கால சிற.ப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”கோடை விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்ற1ன. பெங்களூரு-திருவனந்தபுரம்(வண்டி எண்.06555) வாராந்திர சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமைகளில் இன்று(வெள்ளிக்கிழமை) முதல் வருகிற மே மாதம் 30-ந்தேதி வரை பெங்களூருவில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 2 மணிக்கு திருவனந்தபுரம் … Read more

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

புதுடெல்லி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஜனவரி 31-ந்தேதி முதல் பிப்ரவரி மாதம் 13-ந்தேதி வரை நடைபெற்றது. இதை தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 10-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தநிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெற்றது. இந்த அமர்வின் போது 16 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாகவும். அவையின் வேலை நேரம் 118 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்ததாகவும் சபாநாயகர் ஓம் பிர்லா கூறினார். மேலும் அவர் கூறுகையில், வக்பு திருத்த மசோதா … Read more

மும்பையை விட்டு கோவா அணிக்கு செல்வது ஏன்…? – விளக்கம் அளித்த ஜெய்ஸ்வால்

மும்பை, இந்திய கிரிக்கெட்டின் இளம் நட்சத்திர ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால். இந்திய டெஸ்ட் அணியில் தொடக்க ஆட்டக்காரராக நிரந்தர இடத்தை பிடித்துள்ள ஜெய்ஸ்வால், ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இடம் பிடிக்க போராடி வருகிறார். இவர் உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில், தற்போது அவர் மும்பை அணியில் இருந்து விலகி கோவா அணிக்காக விளையாட உள்ளதாக செய்திகள் வெளியாகின. இதற்கு கடந்த ரஞ்சி சீசனில் சீனியர் மும்பை வீரருடன் ஏற்பட்ட வாக்குவாதமே மிக முக்கிய … Read more

அமெரிக்க பெண் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை – திருச்சி இன்ஜினீயர் சிக்கிய பின்னணி!

சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் கொடுத்த புகாரில், இந்திய குடிமகன் ஒருவர், அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரை இணையதளத்தில் பின்தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் செய்து வருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணுக்கு சமூகவலைதளங்கள் மூலம்தான் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது திருச்சியைச் சேர்ந்த 37 வயதான கிஃப்ட் ஜேசுபாலன் செல்வநாயகம் எனத் தெரியவந்தது. … Read more

பிரதமர் மோடி இலங்கை பயணம்: தமிழக மீனவர்கள் 11 பேர் நிபந்தனையின்றி விடுதலை

ராமேசுவரம்: பிரதமர் மோடியின் இலங்கைப் பயணத்தையொட்டி, தமிழக மீனவர்கள் 11 பேரை இலங்கையில் உள்ள ஊர்காவல் துறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டது. கடந்த மார்ச் 27-ம் தேதி அன்று ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்று, நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ஜெர்ஜிஸ் அந்தோணி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் ரோந்து பணியின் போது சிறைப்பிடித்தனர். படகுகளிலிருந்த ஜெர்ஜிஸ் அந்தோணி , இன்னாசி, பாலமுருகன், சவேரியார் அடிமை, ஆர்னால்ட், பாக்கியராஜ், ரஞ்சித், எபிராஜ், … Read more

வக்பு திருத்த மசோதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. வழக்கு

புதுடெல்லி: வக்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சில மணி நேரங்களில், அதற்கு எதிராக காங்கிரஸ் எம்.பி முகமது ஜாவேத் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பிஹாரின் கிஷன்கஞ்ச் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முகமது ஜாவேத், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அனஸ் தன்வீர் மூலம் தாக்கல் செய்துள்ள மனுவில், “நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வக்பு திருத்த மசோதா, வக்பு சொத்துகள் மற்றும் அவற்றின் நிர்வாக அதிகாரத்தின் மீது தன்னிச்சையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன் … Read more