குட் பேட் அக்லி vs கூலி! போட்டி போட்டு ஒரே நாளில் அப்டேட் பெரிய படங்கள்..

Good Bad Ugly Vs Coolie : ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் அப்டேட்டும், ரஜினியின் கூலி திரைப்படத்தின் அப்டேட்டும் இன்று ஒரே நாளில் வெளியாகிறது.  

தமிழக  அமைச்சர் ஐ பெரியசாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் ஐ பெரியசாமிக்கு எதிரான வீட்டுமனை முறைகேடு வழக்கை ரத்து செய்துள்ளது. தமிழக  அமைச்சர் ஐ பெரியசாமி மீது ஐ.பி.எஸ். அதிகாரி ஜாபர்சேட்டின் மனைவி உள்பட சிலருக்கு வீட்டுமனை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக மீது முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி தவிர இதில் தொடர்புடைய மற்றவர்கள் மீதான வழக்கு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் … Read more

நீட் குறித்து அனைத்து கட்சி கூட்டம் கூட்டுவது மக்களை ஏமாற்றும் நாடகம்: பழனிசாமி விமர்சனம்

நீட் விவகாரத்தில் மக்களை ஏமாற்றுவதற்கான நாடகமே அனைத்துக்கட்சி கூட்டம் என எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி விமர்சித்துள்ளார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குறிப்பிட்ட ஒரு பொருள் குறித்து பேச அனுமதிக்குமாறு பேரவைத் தலைவர் மு.அப்பாவுவிடம் கோரினார். அப்போது பேசிய பேரவைத்தலைவர் அப்பாவு, “மழையில் நெல் மூட்டைகள் நனைந்தது, முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக சிறப்புத் தீர்மானங்களை கொடுத்துள்ளீர்கள். அது தொடர்பாக பேசலாம். நீங்கள் குறிப்படும் பொருள் ஏற்கெனவே மறுக்கப்பட்டது. அதுகுறித்து பேச அனுமதிக்க முடியாது” என்றார். இதையடுத்து … Read more

திருச்சி சிவா இந்தி பாடல்களை நன்றாக பாடுவார்: நிர்மலா சீதாராமன் பேச்சால் மாநிலங்களவையில் சிரிப்பலை

முகம்மது ரஃபி பாடல்களை பாடும் திருச்சி சிவாவுக்கு பாஜகவின் இந்தி முழக்கம் வராதது எப்படி என அமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுப்பிய கேள்வியை தொடர்ந்து மாநிலங்களவையில் சிரிப்பலை எழுந்தது. மாநிலங்களவையில் வக்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேறுவதற்கு முன்பு ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே சூடான விவாதம் நடைபெற்றது. திமுக உறுப்பினர் திருச்சி சிவா பேசும்போது ‘சப்கே சாத் சப்கா விகாஸ் (அனைவருக்கும் அனைத்து வளர்ச்சி)’ எனும் பாஜகவின் இந்தி முழக்கத்தை குறிப்பிட விரும்பினார். ஆனால் … Read more

பென்குயின்கள் வாழும் தீவுகளுக்கு 10% வரி விதிப்பு: நகைச்சுவை மீம்ஸ்களாக வைரலாகும் ட்ரம்ப் உத்தரவு

அன்டார்டிகாவில் பென்குயின்கள் வாழும் இரு தீவுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 10 சதவீத வரி விதித்துள்ளார். இதுதொடர்பான நகைச்சுவை ‘மீம்ஸ்கள்’ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. அமெரிக்க பொருட்கள் மீது அதிக இறக்குமதி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவு பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதன்படி 180-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை அதிபர் ட்ரம்ப் நேற்று முன்தினம் வெளியிட்டார். இந்த பட்டியலில் அன்டார்டிகாவில் உள்ள ஹியர்ட், மெக்டொனால்ட் ஆகிய … Read more

வீர தீர சூரன் வெற்றிக்கு, அனைவருக்கும் நன்றி தெரிவித்த 'சீயான்' விக்ரம்

சீயான் விக்ரம் நடிப்பில்,  ‘வீர தீர சூரன் பார்ட் 2 ‘  படம், வெளியான 8 நாட்களில், 52 கோடி வசூலைக் குவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, நடிகர் சீயான் விக்ரம் நெகிழ்ச்சியுடன், தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

`13 வயசுல வந்தவர்' – மறைந்த `இளமை எனும் பூங்காற்றே' ரவிக்குமார்; திரையுலகத்தினர் அஞ்சலி

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் பிறந்த ரவிகுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மலையாள சினிமாக்களில் நடித்துள்ளார். தமிழில் இவரது முதல் படம் ‘அவர்கள்’, இந்த படத்தில் ரஜினி, கமல் இருவருக்கும் இணையாக அதாவது மூன்றாவது ஹீரோவாக நடித்திருந்தார். ரவிக்குமார் தொடர்ந்து ‘பகலில் ஓர் இரவு’ படத்தில் இவர் நடிகை ஶ்ரீதேவியுடன் நடித்திருந்தார். அந்தப் படத்தின் `இளமை எனும் பூங்காற்றே’ பாடல் ஒரு எவர்கிரீன் சாங் எனச் சொல்லலாம். தமிழில் ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’, ‘மலபார் போலீஸ்;, ‘ரமணா’, ‘விசில்’ என இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் … Read more

‘கைலசா’ நாட்டவர்கள் 20 பேர் நாடு கடத்தல்… பொலிவியா நாட்டில் நித்யானந்தாவின் சீடர்கள் செய்த சில்லுண்டு வேலைகள்…

கைலாசா நாட்டைச் சேர்ந்த 20 பேரை அவரவர் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தியுள்ளதாக பொலிவியா அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் குழந்தைகளை கடத்துதல், பாலியல் வன்கொடுமை மற்றும் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக தேடப்பட்டு வரும் போலி சாமியார் நித்யானந்தா 2019 ம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்து வருகிறார். அதேவேளையில், “பிரபஞ்ச அரசியலமைப்பு” சட்டத்துடன் கைலாசா என்ற பெயரில் உலகின் முதல் இந்துக்களுக்கான “இறையாண்மை கொண்ட தேசத்தை” உருவாக்கியுள்ளதாக அவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காணொளி … Read more

Test Review: டி20 பரபரப்பைக் கூட்டும் ஒன்லைன், டிராவை நோக்கி ஆடப்படும் டெஸ்ட் மேட்ச் ஆனது ஏனோ?

அர்ஜுன் (சித்தார்த்) இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம். ஆனால், கடந்த இரண்டு சீசன்களாக ஃபார்ம் இல்லாமல் தடுமாறுகிறார். இதனால், வரவிருக்கும் இந்தியா – பாகிஸ்தான் இறுதி டெஸ்ட் போட்டியுடன் அவரை ஓய்வு பெற வற்புறுத்துகிறது நிர்வாகம். அவரது பள்ளித் தோழியும் ஆசிரியையுமான குமுதா (நயன்தாரா), குழந்தையின்மையால் மனம் உடைந்து, தன் கணவன் சரவணனோடு (மாதவன்) கருத்தரித்தல் சிகிச்சை பெற்று வருகிறார். அதற்கான IVF சிகிச்சைக்குப் பணம் தேவைப்படுகிறது. அதே நேரத்தில், மனைவியிடம் கேன்டீன் நடத்துவதாகப் பொய் … Read more

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முகமது சலீம் வலியுறுத்தல்

மதுரை: “மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்தவேண்டும்” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் முகமது சலீம் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மதுரை தமுக்கம் மைதானத்தில் மாநாட்டு திடலில் செய்தியாளர்களிடம் கூறியது: “அரசியல் பரிசீலனை அறிக்கை மற்றும் அரசியல் வரைவுத் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. 36 பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். பிரதிநிதிகள் விவாதத்தில், ஒட்டுமொத்தமாக அரசியல் வரைவுத் தீர்மானத்துக்கு ஆக்கப்பூர்வமான, நேர்மறையான ஆதரவு இருந்தது. சில ஆலோசனைகளும் வந்துள்ளன. கேரள … Read more