ரிலையன்ஸ் – பியூச்சர் – அமேசான் : பிரச்சனை முடிக்க இதுதான் வழி.. வங்கிகளின் பலே ஐடியா..!

இந்திய ரீடைல் சந்தையில் மகிப்பெரிய வர்த்தகமாக இருக்கும் ரிலையன்ஸ் – பியூச்சர் குரூப் டீல்க்கு அமேசான் பெரும் முட்டுக்கட்டையாக இருக்கும் நிலையில் மாத கணக்கில் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் அடுத்தடுத்து வழக்கு தொடுத்து வருகிறது.

இந்நிலையில் பியூச்சர் குரூப் பெற்ற கடனுக்குத் தவணையைச் செலுத்த முடியாமல் தவித்து வருகிறது. தவணையைத் தெலுத்த முடியாத காரணத்தால் வங்கிகள் பியூச்சர் குழும நிறுவனத்தைத் திவாலாக அறிவித்து, நிறுவனம் பெற்ற கடனை வாராக் கடனாக அறிவிக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது.

20 நாளில் ரூ.6,34,440 லட்சம் கோடி இழப்பு.. அழுது புலம்பும் 5 பேர்..!

இந்நிலையில் பியூச்சர் குரூப் அமேசான் நிதியுதவியை மறுத்த நிலையில் கடன் தவணையைச் செலுத்தக் கால அவகாசம் கேட்டது. இந்த வழக்கின் விசாரணையில் வங்கிகள் ஒரு முக்கியமான ஐடியாவை கொடுத்துள்ளது.

 பியூச்சர் குரூப்

பியூச்சர் குரூப்

பியூச்சர் குரூப் நிறுவனத்திற்குச் சுமார் 27 வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் கொடுத்துள்ளது, இந்தக் கடனை பியூச்சர் குரூப் நிறுவனம் விற்பனை செய்யப்படாமல் மட்டுமே பெற முடியும். இதனால் இந்நிறுவனத்திற்குக் கடன் கொடுத்த அனைத்து வங்கிகளும் இணைந்து போராடி வருகிறது.

ஏலம்

ஏலம்

இந்நிலையில் இன்று நடந்த வழக்கு விசாரணையில் வங்கிகள் குழு ரிலையன்ஸ் – பியூச்சர் – அமேசான் மத்தியிலான பிரச்சனையைத் தீர்க்க ஓரே வழி அமேசான் மற்றும் ரிலையன்ஸ், பியூச்சர் குரூப்-ஐ 17000 கோடி ரூபாய் என்ற அடிப்படையான விலையை வைத்து ஏலம் மூலம் முடிவு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது.

 27 வங்கிகள் குழு
 

27 வங்கிகள் குழு

27 வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் இருக்கும் இந்த வங்கி குழுவில் 10 தனியார் வங்கிகளும் 3 வெளிநாட்டு வங்கிகளும் உள்ளது. தற்போது பியூச்சர் குரூப் மற்றும் அமேசான் தொடர்ந்து வழக்குத் தொடுத்து வரும் காரணத்தால் விற்பனை செய்ய முடியாமலும், கடனை வசூலிக்க முடியாமலும் உள்ளது.

 வாராக் கடன்

வாராக் கடன்

மேலும் பியூச்சர் குரூப் வாராக் கடனாக அறிவிக்கப்பட்டால் தற்போது வங்கி தரப்பு கோரியுள்ள 17,000 கோடி ரூபாய் கூடக் கிடைக்காது என்பது தான் வங்கிகளின் கவலை. இதனால் ரிலையன்ஸ் – பியூச்சர் – அமேசான் மத்தியிலான பிரச்சனையை வரிவாக முடிக்க இந்த ஐடியாவை முன்வைத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Reliance, Amazon can bid for Future Retail at Rs.17000 crore base price, Banks proposed to SC

Reliance, Amazon can bid for Future Retail at Rs.17000 crore base price, Banks proposed to SC ரிலையன்ஸ் – பியூச்சர் – அமேசான் : பிரச்சனை முடிக்க இதுதான் வழி.. வங்கிகளின் பலே ஐடியா..!

Story first published: Friday, February 4, 2022, 16:25 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.