பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கு தண்டனை காலத்தில் பெங்களூரு சிறையில் இருந்தபோது, சொகுசு வசதிகள் செய்து கொடுப்பதற்காக ரூ.2 கோடி லஞ்சத்தை சிறை அதிகாரிகளுக்கு கொடுத்ததாக சசிகலா மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், குற்றத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக அரசு அனுமதி வழங்கியுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதற்கிடைபோலீசார் குற்றப்பத்திரிக்கையில், முதல் குற்றவாளியாக சிறை கண்காணிப்பாளராக இருந்த கிருஷ்ணகுமார், 2வது குற்றவாளியாக சிறை அதிகாரி ஆர்.அனிதா, 3வது குற்றவாளியாக பி.சுரேஷ், 4வது குற்றவாளியாக கஜராஜ மகனூர், 5வது குற்றவாளியாக சசிகலா, 6வது குற்றவாளியாக இளவரசி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.