கணவனை ஏலத்தில் விற்க முயன்ற பெண்! வெளிநாடொன்றில் நடத்த வேடிக்கை சம்பவம்..


அயர்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பொருட்களை ஏலம் விடும் இணையதளத்தில் தனது கணவனை விற்பனைக்கு பட்டியலிட்டுள்ள வேடிக்கையான சம்பவம் நடந்துள்ளது.

உலகத்தில் எங்கு பார்த்தாலும் கணவன் மனைவி இடையே பிரச்சினை என்பது ஒரு பொதுவான ஒன்றுதான். அனால், சில சமயங்களில் குடும்பத்தில் சண்டை வரும்போது கணவன் அல்லது மனைவி யாரேனும் ஒருவர் வினோதமான காரியங்களில் ஈடுபடுவது உண்டு.

அப்படி ஒரு சம்பவம் அயர்லாந்தில் நடைபெற்றுள்ளது. இங்குள்ள டிரேட் மீ (Trade Me) என்ற இணையதளத்தில் அண்மையில் வந்த விளம்பரத்தைப் பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.

அயர்லாந்தை சேர்ந்த லிண்டா மலிஸ்டர் (Linda MCAlister) என்ற பெண், தனது கணவர் ஜான் மலிஸ்டர் (John MCAlister) ஏலத்தில் விற்பனைக்கு உள்ளதாக அந்த இணையதளத்தில் விளம்பரம் வெளியிட்டிருந்தார்.

லிண்டா வெளியிட்ட அந்த விளம்பரத்தில் “ஜானுக்கு 37 வயது, அவர் 6.1 அடி உயரம் கொண்டவர். இவர் மாடு வளர்ப்பு தொழில் செய்து வருகிறார். இதற்கு முன்பு இவருக்கு ஏராளமான உரிமையாளர்கள் உண்டு.

அவருக்கு முறையாக இரை வைத்து, தண்ணி காட்டினால் மிகுந்த விசுவாசத்துடன் இருப்பார்.

ஆனால், இன்னும் சில வீட்டு பயிற்சி இவருக்கு தேவைப்படுகிறது. ஆனால், எனக்கு அதற்கான பொறுமையோ, நேரமோ கிடையாது. இந்த விற்பனை இறுதியானது. ரிட்டன் அல்லது எக்ஸ்சேஞ்ச் செய்து கொள்ளப்பட மாட்டாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் தனது நண்பர்கள் மூலமாக ஜானுக்கு தெரியவந்தது. இதற்கு சிரிப்பதை தவிர வேறு வழியில்லை என்று ஜான் கூறியுள்ளார்.

இன்னும் வேடிக்கை என்னவென்றால், அவரது ஏல விளம்பரம் வெளியான ஒரு மணி நேரத்தில் 12 பேர் ஜானை ஏலம் கேட்டிருந்தனர்.

கிட்டத்தட்ட 100 நியூசிலாந்து டொலர் வரை (இலங்கை ரூபாய் மதிப்பில் 14 ஆயிரம் வரை) விலை கேட்கப்பட்டது.

இதற்கிடையே, வர்த்தக விதிகள் மீறப்பட்டதாகக் கூறி, Trade Me இணையதளம் அந்த விளம்பரத்தை நீக்கியது.

சமீப காலங்களில் தனது கணவர் விற்பனைக்கு என்று வெளியிடப்பட்ட முதலாவது விளம்பரம் இது என்று Trade Me நிறுவனத்தின் மேலாளர் சம்ஸ் Rayan தெரிவித்தார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.