‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’பீஸ்ட்’ படத்தில் நடித்து வந்தார் விஜய். அண்மையில் இந்தப்படத்தில்
விஜய்
சம்பந்தமான காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டனர். ‘
பீஸ்ட்
‘ படத்தை ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து பிப்ரவரி 22இல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிட உள்ளது.
ஏற்கனவே நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு கணிசமான இடங்களை வென்றது குறிப்பிடத்தக்கது. இந்த தேர்தலில் புகைப்படம் மற்றும் மக்கள் இயக்கத்தினரின் கொடியைப் பயன்படுத்த விஜய் முதன்முறையாக அனுமதி அளித்திருந்தார். இந்நிலையில் நடிகர் விஜய்யை புதுச்சேரி முதலமைச்சர்
ரங்கசாமி
சந்தித்துள்ளார்.
அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை.. முரண்டு பிடிக்கும் ஐஸ்வர்யா: கவலையில் ரஜினி
சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் நடந்த இந்த சந்திப்பில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என
புதுச்சேரி முதல்வர்
ரங்கசாமி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘பீஸ்ட்’ படத்தை முடித்துவிட்டு தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் விஜய்யின் 66-வது படம் உருவாக்கப்போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மகேஷ்பாபு மகள் மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்க உள்ளனர். மார்ச் மாதம் இதன் படபிடிப்பு துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
களமிறங்கும் விஜய் மக்கள் இயக்கம் ; விஜயின் வியூகம் பலிக்குமா?