ஐரோப்பிய நாடான பெலாரஸில் நீளமான தலைமுடியை கொண்டிருந்த இளம் வயது கர்ப்பிணி பெண் இயந்திரத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது மற்றவர்களுக்கு எச்சரிக்கை தரும் செய்தியாக அமைந்துள்ளது.
21 வயதான உமிடா நசரோவா என்ற பெண் ஏழு வார கர்ப்பிணியாக இருந்தார்.
உதவியாளர் பணியில் இருந்த உமிடா, வெல்டிங் கம்பிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையில் புதிய வேலைக்காக விண்ணப்பித்திருந்தார்.
இதையடுத்து அந்த தொழிற்சாலைக்கு 20 நாட்களுக்கு முன்னர் சென்ற உமிடா இடங்களை சுற்றி பார்த்தபடி இருந்தார்.
நீளமான தலைமுடியை கொண்ட உமிடா அதை பின்னி கொள்ளாமல் விரித்து போட்டபடி இருந்தார்.
அப்போது காற்றில் பறந்தபடி இருந்த உமிடாவின் தலைமுடி அங்கிருந்த ஒரு இயந்திரத்தில் சிக்கி கொண்ட நிலையில் அவரும் இயந்திரம் அருகே இழுக்கப்பட்டார்.
இதோடு உமிடாவின் தலைமுடியே அவரின் கழுத்தை நெரித்தது. மேலும் உமிடா இயந்திரத்திற்குள் இழுக்கப்பட்டபோது, அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது மற்றும் உச்சந்தலையின் ஒரு பகுதி கிழிந்தது.
பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட உமிடாவுக்கு 20 நாட்கள் சிகிச்சையளித்த போதிலும் கண்விழிக்காமலேயே உயிரிழந்துள்ளார்.
அந்த தொழிற்சாலையில் பாதுகாப்பு விதிகள் மீறப்பட்டதாகக் உமிடாவின் தந்தை கூறியுள்ளார்.
மேலும், இந்த விபத்து உமிடா மற்றும் அவர் வயிற்றில் இருந்த குழந்தை என இரு உயிர்களை பறித்து சென்றுவிட்டது என கூறியுள்ளார்.
இது தொடர்பில் பெலாரஸ் விசாரணைக் குழு தெரிவிக்கையில், தொழிற்சாலை ஊழியர் உமிடாவுக்கு இயந்திரங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை சுற்றி காட்டி கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் தான் உமிடாவின் தலைமுடி இயந்திரத்தில் சிக்கியுள்ளது.
அவரின் இறுதிச்சடங்கிற்கான செலவை தொழிற்சாலை ஏற்று கொண்டது.
நேர்மையற்ற மற்றும் அலட்சிய மனப்பான்மை காரணமாக தனது கடமையை செய்ய தவறிய குற்றத்திற்காக தொழிற்சாலையின் உற்பத்தி தலைவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.