பளபளப்பான மற்றும் மென்மையான சருமத்தை அடைய, அரிசி நீர்’ பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படுகிறது.
சருமத்திற்கு அரிசி நீரைப் பயன்படுத்துவது முகப்பருவுக்கு சிகிச்சையளிப்பதற்கும், தடுப்பதற்கும், முகப்பரு தழும்புகளை அகற்றுவதற்கும், ஹைப்பர் பிக்மென்டேஷனில் இருந்து விடுபடுவதற்கும் ஒரு இயற்கை வீட்டு தீர்வாகும்.
அரிசி நீரில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் பி, ஈ மற்றும் தாதுக்கள் உள்ளன, அவை செல் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன, இரத்த ஓட்டத்தைத் தூண்டுகின்றன. மேலும்’ குளிர் காலநிலையில் சருமத்தை மென்மையாகவும், இளமையாகவும், பிரகாசமாகவும் வைத்திருக்கின்றன.
அழகு நோக்கங்களுக்காக அரிசி தண்ணீர்- எப்படி செய்வது?
கொலாஜனை அதிகரிக்கவும், புத்துணர்ச்சியூட்டும் சருமத்துக்கும்’ அரிசி நீர் க்யூப்ஸைப் பயன்படுத்தலாம். ஐஸ் தட்டில்’ அரிசி தண்ணீரை ஊற்றி, அதனுடன் வெள்ளரிக்காயை சேர்த்து உறைய வைக்கவும்.
இந்த ஐஸ் கட்டிகளை முகம், கழுத்து மற்றும் முகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில்’ டோனராகப் பயன்படுத்தவும். குளிர்காலத்தில் சருமத்தை பளபளப்பாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க அரிசி தண்ணீர் சிறந்தது.
முகத்தில் உள்ள கறுப்புத் திட்டுகளை (dark patches) போக்க அல்லது கூடுதல் நிறத்துக்கு’ அரிசித் தண்ணீரைப் பயன்படுத்தலாம் அல்லது அரிசிப் பொடியை பச்சைப் பாலுடன் கலந்து கெட்டியான பேஸ்ட்டை உருவாக்கலாம்.
இந்த பேஸ்ட்டை உங்கள் முகம், கழுத்து பகுதிகளில் தடவி, சில நிமிடங்கள் விட்டு, பிறகு சுத்தமான நீரில் கழுவவும். சிறந்த முடிவுகளை அடைய வாரத்திற்கு ஒரு முறை மீண்டும் செய்யவும்.
அரிசி நீர் ஒரு சிறந்த ஹேர் கண்டிஷனராக செயல்படுகிறது. ஷாம்பு செய்த பிறகு, அரிசி தண்ணீரை உங்கள் தலைமுடியில் தடவவும். 15-20 நிமிடங்களுக்கு இயற்கையான சூழலில் உலர வைக்கவும், பின்னர் சாதாரண நீர் கொண்டு கழுவவும். புளித்த அரிசி நீரில் வைட்டமின் பி நிறைந்துள்ளது, இது முடிக்கு மெலனின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.
புளித்த அரிசி நீர் புற ஊதா கதிர்கள் மற்றும் சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.
அரிசி தண்ணீர் எப்படி செய்வது?
உங்கள் சமையலறையில் வேகவைத்த அரிசி தண்ணீரை’ 48 மணி நேரம் வெளியில் வைக்கவும். சிறிது புளிப்பு வாசனை வரத் தொடங்கும் போது, அதை பாட்டிலில் அடைத்து ஃபிரிட்ஜில் வைக்கவும். நீங்கள் சாதாரண அரிசி தண்ணீரைப் பயன்படுத்தும் அதே வழிகளில் புளிக்கவைக்கப்பட்ட அரிசி தண்ணீரைப் பயன்படுத்தலாம்.
நீங்கள் நொதித்தல் மூலம் அரிசி தண்ணீர் தயார் செய்யலாம். ஒரு கண்ணாடி ஜாரில்’ சிறிது அரிசி மற்றும் தண்ணீரை (அரிசியின் இருமடங்கு அளவு) வைக்கவும். அறை வெப்பநிலையில் 1-2 நாட்களுக்கு வைக்கவும். பிறகு, அதனை வடிகட்டி, அந்த தண்ணீரை ஃபிரிட்ஜில் வைக்கவும். இந்த அரிசி தண்ணீர்’ சருமத்தில் உள்ள கொலாஜனை அதிகரிக்கிறது, இது உங்கள் சருமத்தை மிருதுவாக வைத்திருக்கிறது மற்றும் சுருக்கங்களை தடுக்க உதவுகிறது.
எனவே உங்கள் கூந்தல் மற்றும் சரும பராமரிப்புக்கு அரிசி தண்ணீரை கண்டிப்பா பயன்படுத்துங்க!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“