தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய அரசு எடுக்கும் அனைத்து சட்டப்படியான நடவடிக்கைக்கும் அதிமுக துணை நிற்கும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் தேர்வை ரத்து செய்வது குறித்து, அதிமுகவின் நிலைப்பாடை ஏற்கனவே பேரவையில் கூறியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த சட்டமன்ற அனைத்து கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்காத நிலையில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.