கோவையில் கடை ஊழியரை ஏமாற்றி செல்போன் திருடிய வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகியுள்ளது.
கோவை மாவட்டம் காளன்பாளையம் பகுதியில் இணையதள சேவை மையம் மற்றும் எழுதுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது . இந்த நிலையில் கடந்த 27ம் தேதி கடையில் பணியாற்றும் ஊழியர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் கடையில் பொருட்களை வாங்குவது போல யதார்த்தமாக கடைக்கு சென்றுள்ளார். இதனை யாரும் பார்க்கவில்லை என்பதை உணர்ந்த இளைஞர் கடையில் இருந்த விலையுயர்ந்த செல்போனை நைசாக எடுத்து பாக்கெட்டில் போட்டுக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தில் எஸ்கேப் ஆகி உள்ளார்.
இந்த நிலையில் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் திருட்டுத்தனமாக செல்போனை திருடிய வீடியோ காட்சிகள் பதிவாகியது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.