மும்பை: சிங்கத்திற்கு உணவளித்த ஒருசில நாளில் நடிகை நோரா ஃபதேஹியின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது, அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலிவுட் கவர்ச்சி நடிகை நோரா ஃபதேஹி, அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டு கிளுகிளுப்பை ஏற்படுத்துவார். மேலும் தனது இன்ஸ்டாகிராம் கணக்கின் மூலம் அவரது ரசிகர்கள் மற்றும் பின்தொடர்பவர்களை அடிக்கடி தொடர்பு கொண்டு பதிலளித்தும் வருவார். இந்நிலையில் நேற்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை அவரது ரசிகர்களால் பார்க்க முடியவில்லை. இதனால் நோரா ஃபதேஹி தனது இன்ஸ்டாவில் இருந்து வெளியேறிவிட்டதாகவும், அவரது கணக்கு முடக்கப்பட்டதாகவும் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. கடைசியாக அவர் துபாய் சென்று வந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், சிங்கத்திற்கு தனது கரங்களால் உணவளிப்பதைக் காண முடிந்தது. மேலும் விலங்குகளுக்கு எவ்வாறு உணவளிக்க வேண்டும்? என்பது குறித்து, அவரை பின்தொடர்பவர்களுக்கு அறிவுரையும் கூறியுள்ளார். இருந்தாலும், சுமார் 37 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ள நோரா ஃபதேஹியின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடங்கியது அவரது ரசிகர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. ஆனால் அடுத்த சில மணி நேரங்களில் முடக்கப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கம் மீண்டும் செயல்பட தொடங்கியது. இதுகுறித்து நோரா ஃபதேஹி வெளியிட்ட பதிவில், ‘மன்னிக்க வேண்டும் நண்பர்களே! எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹேக் செய்ய முயற்சி நடந்துள்ளது. யாரோ ஒருவர் எனது கணக்கிற்குள் நுழைந்து ஹேக் செய்ய முயன்றுள்ளார். இருந்தாலும், எனது கணக்கை விரைவாக மீண்டெடுத்தவர்களுக்கு நன்றி!’ என்று தெரிவித்துள்ளார்.