BMW மின்சார கார் விளம்பரத்தில், ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் கிரேக்க கடவுள் ஜீயஸாக நடித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவில் மின்சார கார் விற்பனையை BMW தொடங்கியது.
ஐ சீரிஸில் வெளியாகும் மின்சார கார்களின் புதிய விளம்பரத்தின் டீஸரை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த கிரேக்க கடவுளான ஜீயஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள அர்னால்ட், ஜீயஸ் என்ற பெயரை தவறாக உச்சரிக்கும் coffee விற்பனையாளரை முறைத்தபடியே சரியான உச்சரிப்பை தெரிவித்து விட்டு செல்கிறார்.
வரும் 13ந் தேதி, அமெரிக்காவில் நடைபெறும் ரக்பி இறுதி ஆட்டத்தின் போது, புதிய மின்சார கார் மாடலை அறிமுகப்படுத்தி இந்த விளம்பரம் வெளியாகும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.