‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து
சன் பிக்சர்ஸ்
தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’
பீஸ்ட்
’ படத்தில் நடித்து வந்தார் விஜய். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் துவங்கியது. அண்மையில் இந்தப்படத்தில்
விஜய்
சம்பந்தமான காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டனர்.
கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை தொடர்ந்து விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ படத்தை இயக்கினார்
நெல்சன் திலீப்குமார்
. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். ‘டாக்டர்’ படத்தில் கலக்கிய ரெடின் கிங்ஸ்லியும் இந்தப்படத்தில் நடித்துள்ளார்.
‘பீஸ்ட்’ படத்தில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ மற்றும் இயக்குநர் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் செல்வராகவன் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘சாணிக் காயிதம்’ படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் நடித்து முடித்துள்ள செல்வராகவன் அடுத்ததாக ‘பீஸ்ட்’ படத்தில் விஜய்யுடன் நடிக்கிறார்.
என்னை ஹீரோவாக்குனது தனுஷ் சார் தான்: வைரலாகும் சிவகார்த்திகேயனின் வீடியோ..!
அண்மையில் ‘பீஸ்ட்’ படப்பிடிப்பு நூறாவது நாள் நிறைவடைந்ததை அட்டகாசமான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு படக்குழுவினர் கொண்டாடினர். அதனை தொடர்ந்து அண்மையில் ‘பீஸ்ட்’ படத்தில் விஜய் சம்பந்தமான காட்சிகள் முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்..
இந்நிலையில் ‘பீஸ்ட்’ படத்தை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே ‘பீஸ்ட்’ படம் ஏப்ரல் மாதம் வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் மாதம் ‘KGF2’ படமும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ‘பீஸ்ட்’ ரிலீஸ் குறித்த வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வீரமே வாகை சூடும் – விஷால் யுவன் ரசிகர்கள் சொல்வதென்ன?