மொபைல் போன்களுக்குப் பிறகு மடிக்கணினிகளை சந்தைக்குக் கொண்டுவருகிறதா ஜியோ? என்ற கேள்வி இணையத்தில் உலா வருகிறது. இத்தகைய செய்திகள் பல தொடர்ந்து வெளிவந்தாலும், ஜியோ தரப்பில் இருந்து எந்த உறுதிபடுத்தப்பட்ட தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த நிலையில் ஜியோ லேப்டாப் குறித்த புதிய தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. கசிந்த தகவல்களின் படி,
ஜியோ புக் லேப்டாப்
மலிவு விலையில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோ தரப்பில் இருந்து அறிமுகப்படுத்தப்படும் மடிக்கணினிக்கு ஜியோ புக் என்று பெயரிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஜியோ புக் லேப்டாப் விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 11 இயங்குதளம் கணினிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
Jio Phone 5g: மிகக் குறைந்த விலையில் ஜியோ 5ஜி போன்… ஜியோவின் கனவு நனவாகுமா!
பெரும்பாலான கணினிகளுக்கு இதன் மேம்பட்ட பதிப்பு கிடைத்துவிட்டது. எனினும், ஜியோ புக் விண்டோஸ் 10 பதிப்பு கொண்டு தான் இயக்கப்படும் என தகவல்கள் உறுதிபடுத்தியிருக்கின்றன. மிகவும் மலிவான விலையில் தனது லேப்டாப்பை வெளியிட ஜியோ நிறுவனம் முனைப்புக் காட்டி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜியோ புக் அம்சங்கள் (jiobook specifications)
இதனுடன் ஒரு முக்கிய தகவலும் தற்போது நமக்குக் கிடைத்துள்ளது. அதாவது, ஜியோ நிறுவனம் மடிக்கணினிகளை தயாரிக்கப் போவதில்லையாம். கூட்டு ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் ஜியோ தனியார் நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ளது. Emdoor Digital Technology Ltd எனும் அந்த தனியார் நிறுவனம் தான், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கான ஜியோ புக் (JioBook) லேப்டாப்களை தயாரித்து வழங்கவுள்ளது.
Airtel Google partnership: ஏர்டெல்-க்கு அடித்த ஜாக்பாட் – கோடிக்கணக்கில் டாலரைக் குவித்த கூகுள்!
ஜியோ லேப்டாப்களில் மீடியாடெக் நிறுவன MediaTekMT8788 சிப்செட்டு பயன்படுத்தப்படலாம். இண்டெல், AMD நிறுவன சிப்செட்டுகளை விட மீடியாடெக் நிறுவன சிப்செட்டுகள் விலை குறைவானதாகும். அதே நேரத்தில் Intel, AMD நிறுவன சிப்செட்டுகளுக்கு நிகரான திறனை இது வெளிப்படுத்துமா என்பதை பயன்படுத்தி பார்த்த பிறகு தான் தெரியும். 4ஜிபி ரேம் உடன் 512ஜிபி Hard Disk இந்த மடிக்கணினியில் இணைக்கப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜியோ புக் டிசைன் (JioBook Design)
பாமர மக்களை கவரும் வகையில் இந்த லேப்டாப் வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான வேலைகளை செய்ய இந்த மடிக்கணினி துணையாக இருக்கும் என்று தெரிகிறது. ஆனால், திறன் வாய்ந்த எடிட்டிங், கேம்களை இந்த லேப்டாப்பில் அணுகுவது சிக்கலாக இருக்கும் என்று உணரமுடிகிறது. எப்படியாக இருந்தாலும், விலை விவரம் தெரிந்த பின்னரே, இது பயனுள்ளதா இல்லையா என்பதை உறுதியாகக் கூறமுடியும். மேலும், ஜியோ புக் லெனோவா நிறுவனத்தின் திங் பேட் (Lenovo Think Pad) லேப்டாப் போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.
realme pad: ஆண்ட்ராட்டு 12 அப்டேட் கிடைக்கும் முதல் மலிவு விலை டேப்!