Bharathi Kannamma Roshini Haripriyan Stylish Photo : விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியல் பாரதி கண்ணம்மா. கணவன் மனைவிக்கு இடையே சந்தேகம் வந்தால் என்னவாகும் என்பதை தெளிவாக எடுத்து சொல்லும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது.
அருண்பிரசாத் பாரதியாகவும், ரோஷ்னி ஹரிப்பிரியன் கண்ணம்மாவாகவும் நடித்து வந்த இந்த சீரியலுக்கு இல்லத்தரசிகள் பலரும் ரசிகர்களாக உள்ளனர். நன்றாக போய்க்கொண்டிருந்த இந்த சீரியலில இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாயகி ரோஷ்னி ஹரிப்பிரியன் திடீரென சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் பாரதி கண்ணம்மா ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
சினிமா வாய்ப்பு கிடைத்தால், ரோஷ்னி சீரியலை விட்டு விலகியுள்ளதாக தகவல் வெளியான நிலையில், அவருக்கு பதிலாக விணுஷா தேவி கண்ணம்மாவாக நடித்து வருகிறார். தற்போது மீண்டும் விஜய் டிவியில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ள ரோஷ்னி, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3-வது சீசனில் பங்கேற்று வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் ரோஷ்னி அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவர் பதிவிடும் பல பதிவுகள் இணையத்தில் வைரலாக பரவி வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
பாரதி கண்ணம்மா சீரயலில் சேலையில் பார்த்து பழக்கிப்போன ரோஷ்னி தற்போது சிகப்பு நிற மாடர்ன் உடையில் கூளிங் க்ளாஸ போட்டுக்கொண்டு செம ஸ்டைலாக காட்சியளிக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இது ரோஷ்னிதானா என்று கேட்டு வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது இணைத்தில் வைரலாகி வருகிறது.