சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் சிவகார்த்திகேயனின் முதல் படமான மெரினா வெளியாகி அண்மையில் 10 ஆண்டுகள் நிறைவு பெற்றது. சிவகார்த்திகேயனின் இந்த இமாலய வெற்றியை அவரது ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாடிய வேளையில், புதிய சர்ச்சை ஒன்றும் உருவெடுத்தது.
சிவகார்த்திகேயன்
சினிமாவில் 10 ஆண்டுகளை கடந்ததை தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில், “இன்றோடு சினிமாவில் 10 ஆண்டுகள் நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு துவங்கியது இந்தப் பயணம் இன்று உங்கள் இல்லங்களிலும் இதயங்களிலும் நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இடம் நான் நினைத்து கூட பார்த்திராத நிஜம்.
இத்தருணத்தில் எனக்கு முதல் பட வாய்ப்பளித்த இயக்குனர் பாண்டிராஜ் அவர்களுக்கும் அத்தனை தயாரிப்பாளர்களுக்கும் உடன் நின்று பயணித்த இயக்குனர்களுக்கும் தன்னோடு சேர்த்து என்னையும் மிளிரச் செய்த என் சக கலைஞர்களுக்கும் என் படங்களில் பணியாற்றிய அத்தனை தொழிலாளர்களுக்கும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் பத்திரிக்கை தொலைக்காட்சி இணையதள நண்பர்களுக்கு அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டிருந்தார்.
என்னை வற்புறுத்தாதீங்க.. கஸ்தூரி ராஜாவிடம் கோபப்பட்டு கத்திய தனுஷ்..!
இந்த கடிதம்
தனுஷ்
ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நீங்க இந்த அளவுக்கு வளர முக்கிய காரணம் தனுஷ். அவருக்கு நன்றி கூற வேண்டியது உங்களது கடமை என்றும் கமெண்ட் போட ஆரம்பித்தனர். இதற்கு சிவகார்த்திகேயன் ரசிகர்களும் பதிலடி கொடுக்கும் விதமாக கமெண்ட் செய்ய ஆரம்பித்தனர். இதனால் சோஷியல் மீடியாவே பரபரப்பானது.
இந்நிலையில் தனுஷ் குறித்து சிவகார்த்திகேயன் பேசியுள்ள பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் என்னை தனியா சோலோ ஹீரோவா காட்ட முடியும்ன்னு நம்புனவர் தனுஷ் சார் தான். நிறைய பேர் எனக்கு பிசினஸ் இல்லைன்னு சொல்லியும், என்மேல நம்பிக்கை வைச்சு பணம் போட்டாரு.
நான் ஹீரோ இல்லன்றதை உடைச்சு என்னை ஹீரோ ஆக்குனவரு தனுஷ் சார்தான் என அந்த வீடியோவில் பேசியுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த வீடியோவை தற்போது தனுஷ் ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
வீரமே வாகை சூடும் – விஷால் யுவன் ரசிகர்கள் சொல்வதென்ன?