பெங்களூரு,
8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் யு மும்பா அணியும், தமிழ் தலைவாஸ் அணியும் மோதின. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு தொடங்கியது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 35-33 என்ற புள்ளிகள் கணக்கில் யு மும்பாவிடம் தோல்வியடைந்தது.
தற்போது தமிழ் தலைவாஸ் அணி 15 போட்டிகளில் விளையாடி 5 வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது.