வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்-‘மத வன்முறைக்கு எதிராக சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’ என, ஐ.நா.,வில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
நேற்று சர்வதேச மனித சகோதரத்துவ நாள் கடைப்பிடிக்கப்பட்டது. இதை முன்னிட்டு ஐ.நா.,வில் நடந்த கூட்டத்தில், இந்திய துாதர் டி.எஸ்.திருமூர்த்தி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக பேசியதாவது:தற்போது மதங்களுக்கு எதிராக புதிய அச்சம் தலைதுாக்கியுள்ளது. குறிப்பாக ஹிந்து, பவுத்தம் மற்றும் சீக்கிய மதங்களுக்கு எதிரான நடவடிக்கைகள் கவலை அளிக்கின்றன.
இந்த அச்சுறுத்தல்களை ஐ.நா., கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு மதத்தின் மீது மற்றொரு மதத்தினரின் வெறுப்புணர்வுக்கு, ஆப்கனில் அழிக்கப்பட்ட ஆறாம் நுாற்றாண்டு புத்தர் சிலை சாட்சியாக உள்ளது.மதங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு, ஐ.நா., உறுப்பு நாடுகள் தீர்வு காண வேண்டும். அப்போது தான், மத வெறுப்புணர்வு, வன்முறை ஆகியவற்றுக்கு எதிரான விவாதங்கள் பயனுள்ளதாக இருக்கும். மத வன்முறைக்கு எதிராக சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
Advertisement