நியூசிலாந்தில் பெண் ஒருவர் தனது கணவரை ஏலத்தில் விற்க விளம்பரம் கொடுத்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.
தன்னையும், குழந்தைகளையும் 2 நாட்கள் தனியாக வீட்டில் விட்டுவிட்டு, நண்பர்களுடன் கணவர் மீன் பிடிக்க சென்றுவிட்ட கோபத்தில், லிண்டா மெக் அலிஸ்டர் என்ற அந்த பெண் ஆன்லைனில் தனது கணவரை விற்பனை செய்ய இருப்பதாக, அவரின் உயரம், கணவருக்கு பிடித்தவற்றையை குறிப்பிட்டு விளம்பரம் வெளியிட்டிருந்தார்.
லிண்டாவின் இந்த விளையாட்டுப்பதிவை உண்மை என நம்பி 12 பெண்கள் ஜானை வாங்க விருப்பம் தெரிவித்து, ஏலத்தில் பங்கு பெற்றுள்ளனர். இந்த ஏலம் இந்திய மதிப்பில் 7 ஆயிரத்து 400 ரூபாய் வரை சென்றுள்ளது.