எமது மீனவர்களுக்கும், தமிழக மீனவர்களுக்கும் இடையிலே இருக்கின்ற உறவு சிதைந்து விடக்கூடாது, இது வெறுமனே தமிழக மீனவர்கள் சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல என தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவரும், சூழலியலாளருமான பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.
தமிழக மீனவர்களுக்கும், எமது மீனவர்களுக்கும் இடையிலான உறவு கசந்து போகுமாக இருந்தால் நிச்சயமாக ஒட்டு மொத்த தமிழக உறவுகளையும் நாங்கள் பகைக்க வேண்டிய துர்ப்பாக்கிய சூழ்நிலை ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இதேவேளை ஈழத்தமிழர்களுக்கு வெளிநாட்டு முகவர்களால் ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடி உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் எம்முடன் பகிர்கிறார்.
இது தொடர்பான முழுமையான தொகுப்பு,