Vijay TV Serial Update in Tamil : சீரியல்கள் ஒளிபரப்புவதில் முன்னணியில் உள்ள தொலைக்காட்சி விஜய் டிவி. பொதுவாக பெரிய ஹிட் அடித்த திரைப்படங்களின் டைட்டிலை பயன்படுத்தி சீரியலை ஹிட் செய்யும் சூட்சமம் தெரிந்த விஜய்டிவி தனது பெரும்பாலான சீரியல்களுக்கு திரைப்படங்களின் பெயர்களையே பயன்படுத்தி வருகிறது.
அந்த வகையில் திரைப்பட பெயர்களில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலுக்கென தனியாக ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதனால், விஜய் அவ்வப்போது புதிய சீரியலை களமிறக்கி வருகிறது. இதனால் பழைய சீரயல்களின் ஒளிபரப்பு நேரமும் அவ்வப்போது மாற்றடைவது வழக்கமாக உள்ளது.
அந்த வகையில் தற்போது விஜய் டிவியின் 2 சீரியல்கள் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டதால், தற்காலிகமாக நிறுத்தப்பட்ட செந்தூரப்பூவே சீரியல் இனி மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. அதேபோல் மதிய நேரத்தில் ஒளிபரப்பாக வந்த தென்றல் வந்து என்னைத்தொடும் சீரியல் இனி இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
நிறுத்தப்பட்ட செந்துராப்பூவே சீரியல் மீண்டும் ஒளிபரப்பாகி வருவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், தென்றல் வந்து என்னைத் தொடும் சீரியல் இரவு 10.30 மணிக்கு மாற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.