கோவா,
8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறுகிறது.
இந்த நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியும், ஜாம்ஷெட்பூர் அணியும் மோதின. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே ஜாம்ஷெட்பூர் அணியின் டேனியேல் சீமா ஒரு கோல் அடித்தார்.
இதையடுத்து பெங்களூரு அணியில் சுனில் சேத்ரி 54-ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், கிலேடன் சில்வா 62-ஆவது நிமிடத்திலும், 94-ஆவது நிமிடத்தில் ஒரு கோலும் போட்டார். இதனால் பெங்களூரு அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தியது.