இவ்ளோ பிரச்சினைக்கு காரணம் கதிர்தானா… உண்மை தெரிந்து ஷாக்கான கண்ணன்

Tamil srial Pandian Stores Rating Update With Promo : அட… இங்க பாருங்கள் சீரியல்ல பெரிய ட்விஸ்ட் என்று ரசிகர்களை ஆச்சிரியப்பட் வைத்துள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போ விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

பொதுவாக குடும்ப உறவுகளை மையமாக வைத்துத்தான் பல சீரியல்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் குடும்ப உறவுகளை மையப்படுத்தி திரைக்கதை அமைத்து அதில் வெற்றியும் கண்டுள்ள சீரியல்தான் பாண்டியன் ஸ்டோர். 4 சகோதரர்களின் ஒற்றுமையை எப்படி இருக்க வேண்டும் அவர்களின் மனைவிகள் எப்படி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள இந்த சீரியலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

மேலும் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ள இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் முன்னணியில் இருந்து வருகிறது. ஒரு மளிகைகடை நடத்தி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் இப்போது ஒரு பெரிய ஷாப்பிங் மால் கட்டி அதை திறப்பதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளனர். ஆனால் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவர்களின் கடைசிக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துவிட்டனர்.

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டதற்கு கடை கட்டுவதற்காக ஆவனங்கள் சரியில்லை என்று கூறிவிட்டனர். ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது என்று பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் மட்டுமல்லாது சீரியல் பார்க்கும் ரசிகர்களும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த குழப்பத்திற்கு விடை தரும் வகையில் தற்போது சீரியலில் அதிரடி திருப்பம் அரங்கேறியுள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் அடப்பாவி நீயா இந்த வேலையை செய்தது நாங்க எதிர்பார்க்கவே இல்லையே என்று சொல்லும் அளவுக்கு இந்த ட்விஸ்ட்க்கு வேல்யூ அதிகரித்துள்ளது. ஜனார்த்தன் சூப்பர் மார்கெட்டில் பணம் திருடி அந்த பழியை கண்ணன் மீது போட்ட இரண்டு ரவடிகள் தான் இந்த வேலையை பார்த்துள்ளனர். இதில் அந்த மாநகராட்சி அதிகாரி அந்த ரவுடியின் அப்பா என்று அவனே கண்ணனிடம் சொல்லும் ப்ரமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை பார்த்த ரசிகர்கள் பரவாயில்லையே சீரியல்லகூட ட்விஸ்ட் வைக்கிறீங்க… அதுவும் ரொம்பநாள் ஜவ்வுமாதிரி இழுக்காக உடனே யாருனு சொல்லிட்டீங்களே என்று கூறி வரும் ரசிகர்கள் கடை திறக்கும்  நிகழ்ச்சியையும் இப்படி உடனே செஞ்சிவிட்ருங்க அதை ஜவ்வு மாதிரி இழுத்துக்கிட்டு போக வேண்டாம் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த ப்ரமோ தற்போது வைரலாப பரவி வரும் நிலையில், மாநகராட்சி அதிகாரிக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ன பதிலடி கொடுக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆனால் இந்த உண்மை இப்போது கண்ணனுக்கு மட்டுமே தெரியும். இந்த உண்மை தெரியாத கதிர் ஜீவா இருவரும் மூர்த்தியிடம் கடையை திறந்துவிடலாம் என்று கூறி வருகினறனர். ஆனால் உண்மை தெரிந்த கண்ணன், அதை வீட்டில் சொல்லாமல் மறைத்துள்ளான். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், கடை தொடர்பான பிரச்சினைக்கு என்னதான் தீர்வு என்று ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்து வரும் எபிசோடுகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.