வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மன்ஹாட்டன்: அமெரிக்காவின் மன்ஹாட்டனில் காந்தி சிலை மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்க போலீஸார் விசாரணை மேற்கொள்கின்றனர்.
அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரின் அருகே உள்ள யூனியன் ஸ்கொயர் பகுதியில் எட்டு அடி உயர மகாத்மா காந்தி சிலை மர்ம நபர்கள் சிலரால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் வாழும் இந்தியர்கள் மத்தியில் புகழ்பெற்ற இந்த சிலை சேதப்படுத்தப்பட்டதை அடுத்து இந்திய-அமெரிக்க தூதரகங்கள் இடையே இச்செய்தி மிகப் பெரும் விவாதப் பொருளாகி உள்ளது.
இதுகுறித்து நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் கூறுகையில் மகாத்மா காந்தி சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களுக்கு தங்கள் கண்டனத்தை பதிவு செய்வதாகவும் அவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திள்ளது.
இதுகுறித்து நியூயார்க் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளது. காந்தி நினைவு சர்வதேச அமைப்பால் கடந்த 1986ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தியின் 117 ஆவது பிறந்தநாள் அன்று அவரது நினைவாக நியூயார்க் மாகாண நிர்வாகத்திடம் இந்த சிலை பரிசளிக்கப்பட்டது.
இந்த வழக்கு துரிதமாக விசாரிக்க படுவதற்காக தற்போது அமெரிக்க மாகாண புலனாய்வு அமைப்பு இந்த வழக்கை விசாரிக்கவேண்டும் என்று இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.
Advertisement