இலங்கையில் 3 பேரின் உயிரை பறித்த Youtube வீடியோ


வெல்லவாய  எல்லவல நீழ்வீழ்ச்சியில் குளிப்பதற்காக சென்ற 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தமைக்கான காரணம் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அந்தப் பகுதியில் இதற்கு முன்னர் ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக அங்கு குளிப்பதற்கு தடை செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த மூவரும் சென்றுள்ளனர்.

மாத்தறையில் இருந்து வந்த 6 பேர் கொண்ட குழுவினரில் மூவர் இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்களை பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும் அவர்கள் குடிபோதையில் இருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

Youtube இல் பதிவிடப்பட்டிருந்த காணொளி ஒன்றின் தகவலுக்கமைய வீதியை தேடி இந்த இடத்திற்கு இந்த குழுவினர் சென்றுள்ளனர்.

இதற்கு முன்னர் கடந்த ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த எல்லவல பகுதியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

எப்படியிருப்பினும் அதற்காக தடை செய்யப்பட்ட பதாகை காணப்பட்ட போதிலும் உத்தரவை மீறி சென்றமையினால் இவ்வாறான சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Gallery

Gallery

Gallery

Gallery



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.