டெல்லி: ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார். அபார ஆற்றலை வெளிப்படுத்தி கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.