காட்டுமன்னார்கோயில் பேரூராட்சியின் பக்கத்து பக்கத்து வார்டுகளில், திமுகவை சேர்ந்த மாமனார் மற்றும் மருமகள் போட்டியிடும் சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறி உள்ளது.
கடலூர் மாவட்டம் : காட்டுமன்னார்கோவில் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் களம் இறக்கப்பட்ட வேட்பாளர்களில் ஏற்கனவே போட்டியிட்ட திமுகவின் முன்னாள் பேரூராட்சித் தலைவர் கணேசமூர்த்தி மீண்டும் தலைவர் பதவிக்கு களமிறங்கியுள்ளார்.
இதேபோல் 5 வது வார்டில் தமிழ்ச்செல்வன் என்பவரும், 10-வது வாரத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவரும், 18வது வார்டில் ராமலிங்கம் என்பவருக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே போட்டியிட்ட ஆறு பேருக்கு இந்த முறை மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற 9 இடங்களில் புதுமுகங்களை வேட்பாளராக திமுக களமிறக்கி உள்ளது.
இதில் சுவாரசியமான சம்பவம் என்னவென்றால், திமுக நகர செயலாளர் மற்றும் முன்னாள் தலைவர் கணேசமூர்த்தி 17 வது வார்டில் மீண்டும் போட்டியிடுகிறார். அதே போல அவரின் மருமகள் ஆனந்தி வசந்த் 15வது வார்டில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
திமுகவை சேர்ந்த மாமனாரும் மருமகளும் பக்கத்து பக்கத்து வார்டுகளில் போட்டியிடுவது அந்த பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.