இன்றைய காலகட்டத்தில் கொரோனாவின் தாக்கம் என்பது மிக மோசமானதாக இருந்து வந்தாலும், மக்கள் மத்தியில் சேமிப்பின் அவசியத்தினையும் உணர்ந்துள்ளனர்.
இதற்கிடையில் பல முதலீட்டு திட்டங்களிலும் கணிசமான முதலீடுகள் அதிகரித்துள்ளன.
பொதுவாக நீண்டகால நோக்கில் மியூச்சுவல் ஃபண்டுகள் நல்ல லாபம் கொடுக்கலாம் என்றே நிபுணர்கள் கூறிவருகின்றனர்.
குறைந்த தொகையை முதலீடு செய்யலாம்
அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது 50 வயதில் 11 கோடி ரூபாய் வேண்டும். தற்போது வயது 25. எவ்வளவு முதலீடு செய்யணும்? எந்த திட்டத்தில் முதலீடு செய்யணும்? வாருங்கள் பார்க்கலாம்.
பொதுவாக பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், தங்கம், பிக்சட் டெபாசிட் உள்ளிட்ட திட்டங்களில் நீங்கள் அதிகளவு முதலீடுகளை செய்ய வேண்டும். ஆனால் மியூச்சுவல் ஃபண்டுகளில் மிக குறைந்த தொகையினை கூட எஸ் ஐ பி மூலம் முதலீடு செய்யலாம்.
இலக்கு
என்னுடைய கார்ப்பஸ் இலக்கு 50 வயதில் 11 கோடி ரூபாய். தற்போது முதலீட்டாளர்கள் 25 வயதுடைய நபர். இவரின் மாத சம்பளம் 40,000 ரூபாயாகும். கார்ப்பஸ் இலக்கு பெரியதாக இருந்தாலும், இவர் நேரிடையாக பங்கு சந்தையில் முதலீடு செய்ய விருப்பமில்லை என கூறியுள்ளார்.
எஸ்ஐபி
தொடர்ச்சியாக 15% லாபம் 25 வருடங்களுக்கு கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். அதேபோல வருடா வருடம் சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க எஸ்ஐபி முதலீட்டினையும் அதிகரிக்க வேண்டும். ஆரம்பத்தில் நீங்கள் மாதம் 12,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மாதம் ரூ.12,000
மாதம் 12000 ரூபாய் முதலீடு செய்வதன் மூலம், சுமார் 15% லாபம் கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம். 25 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால், 25 ஆண்டுகள் கழித்து, 3,94,08,885 ரூபாயாக கிடைக்கும். இதில் முதலீட்டு தொகையாக 36,00,000 ரூபாயும், வருமானமாக 3,58,08,885 ரூபாயும் கிடைக்கும். ஆக மொத்தம் 25 ஆண்டுகள் கழித்து கிடைக்கும் மொத்த தொகை 3,94,08,885 ரூபாயாகும்.
என்ன ஃபண்டுகள்
எஸ்ஐபி-யில் ஈக்விட்டி ஃபண்டுகளை எடுக்கலாம். இதுதான் நல்ல லாபம் கிடைக்க வழிவகுக்கும்.
எனினும் இந்த தொகையானது உங்களது கார்ப்பஸ் இலக்கினை அடைய போதுமானதாக இருக்காது. ஆக ஆண்டுக்கு ஆண்டு உங்களது முதலீட்டு தொகையினை அதிகரித்தால் மட்டுமே இலக்கினை அடைய முடியும். இத்தோடு நிறுத்திக் கொள்ளலாமல், சம்பள விகிதம் அதிகரிக்கும் போதெல்லாம், உங்களின் முதலீட்டினையும் அதிகரிக்க வேண்டும். ஏனெனில் பணவீக்கம் என்பது தொடர்ந்து அதிகரிக்கவே செய்யும் என்பதால், அதற்கேற்ப முதலீட்டினையும் அதிகரிக்க வேண்டும். இதன் மூலம் இன்னும் வருவாய் அதிகமாக கிடைக்கும்.
What can be done to achieve the Rs 11 crore corpus target?
What can be done to achieve the Rs 11 crore corpus target?/50 வயதில் ரூ.11 கோடி சாத்தியமா.. எதில் முதலீடு..எவ்வளவு செய்யலாம்..!