நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டொலர் பற்றாக்குறையால் குறித்த இக்கட்டான நிலை ஏற்படலாம் என குறிப்பிடப்படுகின்றது.
துறைமுகத்தில், 500 அரிசி கொள்கலன்கள் உள்ளிட்ட இரண்டாயிரம் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் டொலர் நெருக்கடியின் காரமணாக சிக்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த கொள்கலன்களில் சீனி, உருளைக்கிழங்கு, பருப்பு, மிளகாய் மற்றும் வெங்காயம் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்கள் இருக்கின்றன.
இந்த கொள்கலன்களை, விடுவிக்க முடியாமல் போனால் சந்தையில் அத்தியாவசிய பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்படக் கூடும் என்றும் இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.