சேலம்:
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி இன்று சேலம் மாவட்டம் வனவாசியில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பங்கேற்றார். இக்கூட்டத்தில், வனவாசி, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அவர் அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் அவர் பேசியபோது, 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது பல்வேறு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து திமுக ஆட்சிக்கு வந்ததாகவும், ஆட்சிக்கு வந்தபிறகு, எந்த திட்டங்களையும் நிறைவேற்றவில்லை என்றும் விமர்சனம் செய்தார்.
‘ஏற்கெனவே நான் முதலமைச்சராக இருந்தபோது போடப்பட்ட திட்டங்களை ஸ்டாலின் தொடங்கி வைத்துக்கொண்டிருக்கிறார். அவர் எந்த புதிய திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. எல்லாம் வார்த்தை ஜாலங்கள்’ என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இதையும் படியுங்கள்… 36 மொழிகளில் 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்- இந்தியாவின் இசைக்குயில் விடைபெற்றது