இன்னும் இரண்டு மாதத்தில் திருப்பதி கோவிலில் கொரோனா கட்டுப்பாடுகள் அகற்றப்பட்டுப் பக்தர்கள் வழக்கம்போல் தரிசிக்க அனுமதிக்கப்படும் எனத் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி திருப்பதி தேவஸ்தானத்தின் ஆலோசகர்கள் குழுத் துணைத்தலைவர்கள், உறுப்பினர்கள் பதவியேற்பு விழா சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானத்தில் நடைபெற்றது.
ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக இந்திரா ராஜேந்திரன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் ஆகியோர் உட்பட 24 பேர் பதவியேற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சிக்குப் பின் திருப்பதி தேவஸ்தானத் தலைவர் சுப்பாரெட்டி, தமிழ்நாடு திருப்பதி தேவஸ்தானத் தலைவர் சேகர் ரெட்டி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.