பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள செய்தியில், இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கர் மறைந்த செய்தியால் மிகுந்த வேதனையடைவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
80 ஆண்டுக்காலம் பரந்து விரிந்த அவரது இசைவாழ்வில் தனது தேன்குரலால் ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் வருடிச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் இசை ஆர்வலர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.