சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு நாட்டின் எல்லைகளை மீண்டும் திறப்பதற்கான நாள் வெகு தொலைவில் இல்லை என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். இந்த வாரம் பாராளுமன்றம் இது குறித்து விவாதிக்கும் என்றும் அவர் கூறினார்.
2020 ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா பரவல் (Corona Virus) தொடங்கியதில் இருந்து, தனது எல்லைகளை மூடிய ஆஸ்திரேலியா, அதன் குடிமக்கள், புலம்பெயர்ந்தோர், சர்வதேச மாணவர்கள் மற்றும் சில பணியாளர்களை மட்டுமே அனுமதிக்கும் வகையில், கடுமையான கட்டுபாடுகளை விதித்திருந்த நிலையில், மீண்டும் திறக்கப்படுவது குறித்து செய்தி வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஜனவரியில், ஈஸ்டருக்கு முன்னர் சர்வதேச எல்லைகள் முழுமையாக மீண்டும் திறக்கப்படும் என்று தான் நம்புவதாக மோரிசன் கூறியிருந்தார்.
ALSO READ | பதவியை காப்பாற்றும் முயற்சி; புதிய அதிகாரிகளை நியமிக்கும் பிரதமர் போரிஸ் ஜான்சன்!
மிகவும் பரவக்கூடிய Omicron மாறுபாடு தொடர்ந்து பரவி வரும் நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் இறப்புகள் குறைந்து வருகின்றன. இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் ஆஸ்திரேலியா தனது எல்லைகளை மீண்டும் திறக்கக்கூடும் என்று ஆஸ்திரேலிய செய்தித் தாள்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளன.
“எங்கள் எல்லைகளைத் திறக்கவும், ஆஸ்திரேலியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று மோரிசன் ஞாயிற்றுக்கிழமை கூறினார். “
ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தின் முதல் 2022 அமர்வு திங்கள்கிழமை தொடங்க உள்ள நிலையில், சுற்றுலாப் பயணிகளுக்கான எல்லைகளை மீண்டும் திறப்பது குறித்து “மிக விரைவில்” அறிவிப்பு வெளியாகும் என்று மோரிசன் கூறினார்.
ஆஸ்திரேலியா மக்கள் தொகையில், கிட்டத்தட்ட 95% பேர் 16 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்ற நிலையில், கொரோனா வைரஸுக்கு எதிராக இருமுறை தடுப்பூசி போடப்பட்டவர்கள் மற்றும் கிட்டத்தட்ட 90 லட்சம் பேர் ஆவர். அனைத்து சர்வதேச பயணிகளும் தடுப்பூசி போடபப்ட்டிருக்க வேண்டும் அல்லது மருத்துவ தடுப்பூசி விலக்கு சான்றுகளை வழங்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது.
ALSO READ | Mystery: காணாமல் போனதாகக் கருதப்படும் உலகின் ‘5’ மர்ம தீவுகள்!