வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஹிமாலயா என்ற பெயரிடப்பட்ட கரடி சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தது.
தெற்காசியாவின் மிகப்பெரிய உயிரியல் பூங்காவான வண்டலூர் உயிரியல் பூங்காவில் இரண்டாயிரத்துக்கும் அதிகமான வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இமயமலைப் பகுதிகளில் காணப்படக்கூடிய ஆசிய கருப்பு கரடி இனமான ஹிமாலயா கரடியும் இங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இது இதில் ஜான் என்ற பெயர் கொண்ட 34 வயது உடைய இமயமலை கருப்பு கரடி ஒரு மாதத்திற்கு மேலாக சரியான முறையில் உணவு உட்கொள்ளாமல் அவதிப்பட்டு வந்தது.
சில தினங்களாக மூக்கு மற்றும் வாய் பகுதியில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில் மயக்கம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தது. சிகிச்சையில் அதற்கு புற்று நோய் தாக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பூங்காவில் உள்ள விலங்குகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஹிமாலயா கரடி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தது.