ஆஸ்திரேலியாவில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் புதர்தீயை அணைக்கும் முயற்சியில் 200 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பெர்த் நகர் அருகே 3 வெவ்வேறு பகுதிகளில் ஏற்பட்ட புதர்தீ குடியிருப்பு பகுதிகளை நெருங்கியதால் அங்கு உச்சகட்ட அவசர எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை விட்டு உடனடியாக வெளியேறினர்.
வீட்டில் பற்றிய நெருப்பை அணைக்க முயன்ற நபர் கடுமையான தீக்காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.