மும்பை:
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் (92), இன்று காலமானார்.
லதா மங்கேஷ்கர் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.
லதா மங்கேஷ்கர் இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், சிவாஜி பார்க்கில் கொண்டு வரப்பட்ட லதா மங்கேஷ்கர் உடலுக்கு மந்திரிகள் மற்றும் பாலிவுட் பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.இதையடுத்து துப்பாக்கி குண்டுகள் முழங்க அவரது உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள்…லதா மங்கேஷ்கர் மறைவிற்கு தமிழ் திரையுலகினர் அஞ்சலி