செங்கல்பட்டு அருகே, சாலையில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரி மீது மோதிய கார் குட்டிக்கரனம் அடித்து நின்றது.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக, சென்னை நோக்கி சென்ற கண்டெய்னர் லாரியை, பின்னால் ரெனால்ட் டஸ்டர் காரில் வந்த நபர் முந்த முயற்சித்துள்ளார். காருக்கு வழி விடுவதற்காக லாரியை ஓட்டுநர் ஓரங்கட்டியபோது, சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கட்டையில் லாரி ஏறி சாலையில் கவிழ்ந்துள்ளது.
இதற்கிடையே, கார் மீது கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில், காரை ஓட்டுநர் வேகமாக செலுத்திய போது, கட்டுப்பாட்ட்டை இழந்த கார் கண்டெய்னர் லாரி மீது மோதி குட்டிக்கரனம் அடித்து சாலையில் நின்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.