இந்தியாவில் ரிசர்வ் வங்கி மூலமாக அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சியானது விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று பட்ஜெட் 2022ல் அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில் கிரிப்டோகரன்சிகளுக்கு வரி விகிதம் 30% விதிகப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸூக்கு பலத்த இழப்பு.. 9 நிறுவனங்களுக்கு ஒரே வாரத்தில் ரூ.3 லட்சம் கோடி நஷ்டம்..!
எனினும் பொருளாதார ஆய்வாளர்கள் கிரிப்டோகரன்சிகள் குறித்து எதிரான கருத்தினையே கூறி வருகின்றனர். குறிப்பாக இந்திய பங்கு சந்தையின் தந்தை என்று அழைக்கப்படும் ராகேஷ் ஜுன் ஜுன்வாலா, கிரிப்டோகரன்சி சந்தையானது வீழ்ச்சி காணலாம். இது ஒரு போதும் ஈக்விட்டி சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தாது என்றும் கூறியிருந்தார்.
அரசின் கருத்து
ஆக இப்படி கிரிப்டோகரன்சிக்கு எதிரான கருத்துகள் சந்தையில் நிலவி வரும் நிலையில்,மத்திய அரசு சில தினங்களுக்கு முன்பு கிரிப்டோகரன்சி சட்டபூர்வ பணமாக இருக்காது என்றும் கூறப்பட்டது. தற்போது நாட்டில் கிரிப்டோகரன்சிகளை முதலீடுகள் பரவலாக செய்யப்பட்டு வரும் நிலையில், மத்திய அரசு இப்படி ஒரு கருத்தினை தெரிவித்துள்ளது.
பிட்காயின்
பிட்காயின் மதிப்பானது தற்போது 0.53% அதிகரித்து, 41,721.57 டாலராக காணப்படுகின்றது.
கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 41,920.20 டாலர்களாகும். இதே இதன் குறைந்தபட்ச விலை 40,974.77 டாலர்களாகும். நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 10% சரிவில் தான் காணப்படுகிறது.
எத்திரியம் மதிப்பு
எத்தரியத்தின் மதிப்பானது தற்போது 0.68% அதிகரித்து, 3016.20 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 3062.90 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 2964.70 டாலர்களாகும். நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 17.89% வீழ்ச்சி கண்டுள்ளது.
கார்டானோ நிலவரம்
கார்டானோ மதிப்பானது 2.19% குறைந்து, 1.13 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 1.15 டாலராகவும், இதே குறைந்தபட்ச மதிப்பு என்பது 1.10 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 13.82% சரிவினைக் கண்டுள்ளது. இதன் புதிய வரலாற்று உச்சம் 3.10 டாலர்களாகும்.
எக்ஸ்ஆர்பி நிலவரம்
எக்ஸ்ஆர்பி-யின் மதிப்பானது 0.22% அதிகரித்து, 0.672174 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.68 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.65 டாலராகும். இதன் வரலாற்று உச்ச விலை 3.40 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 18.82% குறைந்துள்ளது.
டோஜ்காயின் தற்போதைய நிலவரம்
டோஜ்காயின் மதிப்பானது 1.17% குறைந்து, 0.147559 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.15 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.15 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 13.44% சரிவைக் கண்டுள்ளது.
யுனிஸ்வாப் மதிப்பு
யுனிஸ்வாப் மதிப்பானது 2.56% குறைந்து, 11.40 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 11.84 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 11.13 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 33.25% சரிவில் தான் உள்ளது.
போல்கடோட் நிலவரம் என்ன?
போல்கடோட் மதிப்பானது தற்போது 0.73% குறைந்து, 21.47 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 21.97 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 20.89 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 19.78% சரிவில் தான் உள்ளது.
Cryptocurrency prices on February 6th, 2022: bitcoin, Ethereum trade flat
Cryptocurrency prices on February 6th, 2022: bitcoin, Ethereum trade flat/கிரிப்டோகரன்சிகளுக்கு எதிரான கணிப்புகள்.. பெரியளவில் மாற்றமின்றி காணப்படும் டிஜிட்டல் கரன்சிகள்..!