செல்போன் தயாரிப்பில் இன்னும் சில ஆண்டுகளில் இந்தியா உலகின் முதன்மை நாடாக உருவெடுக்கும் என மத்திய தொலைத்தொடர்பு, மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஏற்கனவே உள்ள 200 செல்போன் தயாரிப்பு மையங்கள் மூலம் உலகின் 2-ஆவது அதிக செல்போன் தயாரிக்கும் நாடாக இந்தியா உள்ளதாக கூறிய அமைச்சர், தற்போது அதன் சந்தை மதிப்பு 6 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதெனவும், இந்த துறை 22 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதே வளர்ச்சி தொடர்ந்தால் இன்னும் 5 ஆண்டுகளில் இந்த துறையின் சந்தை மதிப்பு 25 லட்சம் கோடியை எட்டும் எனவும், 80 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.